இயக்குநர் இமயத்திற்கு அஞ்சலி
12 Jun 2026, 10:29 pm
<p><strong>இயக்குநர் இமயத்திற்கு அஞ்சலி</strong></p><p>திருப்பூர், ஜூன் 12- மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு தமுஎகச சார்பில் மலரஞ் சலி நிகழ்ச்சி பல்வேறு பகுதி களில் நடைபெற்றது. திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற்ற நிகழ்வில், பாரதிராஜா உரு வப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திய பிறகு திருப்பூ ரின் அனைத்து கலை இலக் கிய முற்போக்கு அமைப்புகளின் நிர்வாகிகள் அவரது நினை வுகளைப் பகிர்ந்து கொண்டனர். இதேபோன்று, உடுமலை மற்றும் மடத்துக்குளம் கிளை கள் சார்பில் மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு புகழஞ் சலிக்கூட்டம் உடுமலை பேருந்து நிலையம் அருகே நடைபெற் றது. இதில், உடுமலை தமுஎகச தலைவர் சுதா சுப்பிரமணி யன், கிளைச் செயலாளர் துரையரசன், மடத்துக்குளம் தமு எகச தலைவர் தேவயானி, செயலாளர் ராஜரத்தினம் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
