திருத்துறைப்பூண்டியில் தோழர் என்.சங்கரய்யா நினைவஞ்சலி
16 Nov 2025, 3:30 pm
<p><strong>திருத்துறைப்பூண்டியில் தோழர் என்.சங்கரய்யா நினைவஞ்சலி</strong></p>
<p>திருவாரூர், நவ.16- விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யா 2 ஆம் ஆண்டு நினைவஞ்சலி- துணைக்குழு பேரவை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சிபிஎம் அலுவலகத்தில் வைக்கப்பட்ட தோழர் என்.சங்கரய்யா உருவப்படத்திற்கு மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தினார். திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல் மார்க்ஸ், நகரச் செயலாளர் ஜி.கோபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. ஜேதிபாசு, கே.ஜி. ரகுராமன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு.பிரகாஷ், மூத்த தோழர் டி.சுப்பிரமணியன், நகர்மன்ற துணை தலைவர் எம். ஜெயபிரகாஷ் மற்றும் பலர் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றிய துணைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு, தியாகி சிவராமன் நினைவகத்தில் ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல்மார்க்ஸ் தலைமையில் நடைபெற்றது. “மார்க்சிஸ்ட் கட்சி ஒரு அறிமுகம்’’ என்ற தலைப்பில் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கருத்துரை ஆற்றினார். வகுப்பில் துணைக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p>
