தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேட்டைக்காரன் இன மக்களுக்காக போராடிய தோழர் இ.கங்காதுரைக்கு புகழஞ்சலி

8 Jul 2026, 10:43 pm
வேட்டைக்காரன் இன மக்களுக்காக போராடிய தோழர் இ.கங்காதுரைக்கு புகழஞ்சலி
<p><strong>வேட்டைக்காரன் இன மக்களுக்காக போராடிய தோழர் இ.கங்காதுரைக்கு புகழஞ்சலி</strong></p><p>திருவள்ளூர், ஜூலை 8- வேட்டைக்காரன் இன மக்களின் உரிமை களுக்காகவும், அவர்களை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் கடந்த 10 ஆண்டுகளாகத் தீவிரமாகப் போராடிய தோழர் இ.கங்காதுரை, அண்மை யில் காலமானார். அவரது புகழஞ்சலி மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி, ஆவடியை அடுத்த சேக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) நடைபெற்றது. வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.டில்லி தலைமை தாங்கிய இந்நிகழ்வில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பேசிய பி.டில்லிபாபு, 1976-க்குப் பிறகு பழங்குடியினர் பட்டிய லிலிருந்து நீக்கப்பட்ட வேட்டைக்காரன் இன மக்களை, மீண்டும் பட்டியலில் சேர்க்கக் கடந்த 10 ஆண்டுகளாகத் தோழர் கங்காதுரை முன்னெடுத்த போராட்டங்களைப் பாராட்டினார். அவரது முயற்சியால் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் மூலம் இந்த மக்களின் வாழ்வியல் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார். மேலும், கங்கா துரையின் மக்கள் நலப் போராட்டங்களை ஆவணப்படுத்தும் வகையில், அவரது வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக வெளி யிடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.