உ. நிர்மலாராணி நினைவிடத்தில் பிருந்தாகாரத் அஞ்சலி
21 Mar 2026, 2:42 pm
<p><strong>உ. நிர்மலாராணி நினைவிடத்தில் பிருந்தாகாரத் அஞ்சலி</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, மார்ச் 21 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், இலவச சட்ட உதவி மையத்தின் மாநிலத் தலைவருமான அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி அவர்களின் சகோதரி தோழர் உ. நிர்மலா ராணி திங்க ளன்று மறைந்தார். இந்நிலையில், உ. நிர்மலா ராணி நினைவிடத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பிருந்தா காரத் சனிக்கிழமையன்று நேரில் மலர் வளை யம் வைத்து செவ்வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் மறைந்த உ. நிர்மலா ராணி அவர்களின் குடும்பத்தினர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரேணுகா, லெனின், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் தர்மா, விஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
