தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அடிப்படை வசதிகளின்றி வசித்து வரும் பழங்குடியினர்!

23 Jan 2026, 5:49 pm
அடிப்படை வசதிகளின்றி வசித்து வரும் பழங்குடியினர்!
<p><strong>அடிப்படை வசதிகளின்றி வசித்து வரும் பழங்குடியினர்!</strong></p> <p>உதகை, ஜன.23- கூடலூர் அருகே உள்ள கொல் லூர்வயல் பகுதியில் 50 ஆண்டுக ளுக்கும் மேலாக சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எது வுமின்றி வசித்து வரும் பழங்குடி யின மக்கள், தங்களது அடையாள அட்டைகளை வட்டாட்சியரிடம் ஒப் படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தியது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள புளியம்பாறை, கொல்லூர்வயல் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர், கடந்த 50 ஆண்டு களுக்கும் மேலாக வசித்து வரு கின்றனர். ஆனால், இப்பகுதி மக்க ளுக்கு சாலை மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எது வும் செய்து தரப்படவில்லை. குறிப் பாக, புளியம்பாறை பகுதியிலி ருந்து கொல்லூர்வயல் வரை &nbsp;இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியை ஒட்டி அமைந் துள்ள இக்கிராமத்திற்கு, வனப்ப குதி வழியாக தான் செல்ல வேண் டும். இதனால் யானை, புலி உள் ளிட்ட வன விலங்குகளின் அச்சுறுத் தல்களுக்கிடையே அத்தியாவசிய தேவைகள் மற்றும் பள்ளி, கல்லூரி களுக்கு மாணவர்கள் நடந்து &nbsp;செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும், மருத்துவ அவ சர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் &nbsp;வாகனங்கள் எதுவும் வர முடியா ததால், சில நேரங்களில் உயிரிழப்பு களும் ஏற்பட்டு வருகின்றன. தங் கள் கிராமத்திற்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என மாவட்ட நிர்வா கத்திற்கு நீண்ட நாட்களாக மனு &nbsp;அளித்து வந்த நிலையில், இக்கிரா மத்திற்கு செல்வதற்கான சாலை வசதி ஏற்படுத்தி தர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், வனப் பகுதியின் நடுவே சாலை அமைக்க வனத்துறையினர் தொடர்ந்து அனு மதி மறுத்து வருவதால், பழங்குடி யினர் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். இதனால் தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடை யாள அட்டைகள் மற்றும் ஆதார் அட்டைகளை வட்டாட்சியரிடம் ஒப் படைத்து, எதிர் வரும் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.