தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மருத்துவமனையில் அனுமதி மறுப்புசாலையோரத்தில் குழந்தை பெற்றெடுத்த பழங்குடிப் பெண்

1 Oct 2026, 10:29 pm
மருத்துவமனையில் அனுமதி மறுப்புசாலையோரத்தில் குழந்தை பெற்றெடுத்த பழங்குடிப் பெண்

மருத்துவமனையில் அனுமதி மறுப்புசாலையோரத்தில் குழந்தை பெற்றெடுத்த பழங்குடிப் பெண்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம், கியான்பூர் பகுதியில் மகாராஜா சேத் சிங் மாவட்ட மருத்்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஜோரை கிராமத்தைச் சேர்ந்த ராணி தேவி என்ற இளம்பெண் பிரசவ வலியால் அவதிப்பட்டபடி தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை இரவு வந்தார். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்ததைத் தொடர்ந்து, முசார் பழங்குடி இனத்தைச் சேர்ந்த20 வயதுப் பெண் ராணி தேவி சாலையோரத்தில் குழந்தை பெற்றெடுத்தார். முசார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் செவிலியர் ராணி தேவியைக்கவனிக்க மறுத்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக ராணியின் சகோதரர் விஜய் குமார் கூறுகையில்,”எனது சகோதரிக்குச் செவிலியர் நீலம் மௌரியா பிரசவம் பார்க்க மறுத்துவிட்டார். ராணி முசார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரைப் கவனிக்க முடியாது என்று கூறி வெளியே தள்ளினர்” என அவர் குற்றம்சாட்டினார்.தகவலறிந்த மகளிர் அமைப்புகளும் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்களும் மருத்துவமனையில் திரண்டனர்.ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த விஷயம் வைரலானதைத் தொடர்ந்து, மகாராஜா சேத் சிங் மாவட்ட மருத்துவமனை தலைமை மருத்துவஅதிகாரி டாக்டர் எஸ்.கே.சக் புதன்றன்று ராணி தேவியின் வீட்டிற்குச் சென்று தாயையும் சேயையும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். சாதியைக் காரணம் காட்டி பழங்குடிப் பெண்ணிற்குப் பிரசவம் மறுக்கப்பட்டதும், சாலையோரத்தில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.