முந்தய பக்கம்

அடிப்படை வசதிகளற்ற பழங்குடியின கிராமம்: ஆட்சியரிடம் முறையீடு

22 Dec 2025, 4:02 am
அடிப்படை வசதிகளற்ற பழங்குடியின கிராமம்: ஆட்சியரிடம் முறையீடு
<p>உதகை, டிச. 22- நீலகிரி மாவட்டம் கூட லூர் அருகே உள்ள அய்யன் கொல்லி, பன்னிக்கல் கிரா மத்தில் வசிக்கும் பழங்குடி யின மக்கள், தங்கள் பகுதி யில் போதிய அடிப்படை &nbsp;வசதிகள் செய்துதரப்பட வில்லை என்று, ஆட்சியரி டம் திங்களன்று மனு அளித்த னர். அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது, கூட லூர் அய்யன்கொல்லி பகுதியில் சுமார் 40-க் கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் பழங்குடியின குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் முறை யான சாலை வசதி இல்லாததால், பள்ளி &nbsp;செல்லும் குழந்தைகள் மற்றும் அவசர காலங் களில் மருத்துவமனைக்கு செல்லும் நோயா ளிகளை அழைத்துச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. அரசு சார்பில் தொகுப்பு &nbsp;வீடுகள் வேண்டி பலமுறை அதிகாரிகளிடம் &nbsp;மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. &nbsp;கிராமத்தில் &nbsp;தெருவிளக்குகள் எரியாததாலும், பாது காக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லாததாலும் &nbsp;அன்றாடத் தேவைகளுக்கு பழங்குடியின மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்ற னர். &nbsp;இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதி காரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த &nbsp;தீர்வும் எட்டப்படவில்லை. ஆட்சியர் தலை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் &nbsp;என அதில் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram