முந்தய பக்கம்

பழங்குடி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

20 May 2026, 11:14 pm
பழங்குடி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக!
<p><strong>பழங்குடி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக!</strong></p><p>ஒன்றிய அமைச்சரிடம் மனு சென்னை, மே 20 - ஆதிவாசி உரிமைகளுக் கான தேசிய மேடையின் மத்தியக் குழு கூட்டம் தில்லி யில் அரிகிருஷ்ண சிங் சுர்ஜித் பவனில் மே 16, 17 ஆகிய தேதி களில் நடைபெற்றது. மே 16 அன்று ஒன்றிய அரசின் பழங்குடி நலத்துறை அமைச்சரை ஆதிவாசி உரி மைகளுக்கான தேசிய மேடை யின் ஒருங்கிணைப்பாளர்கள் பிருந்தா காரத், ஜிதேந்திர சவுத்ரி தலைமையில் மற்றும் அகில இந்திய பொருளாளர் டில்லிபாபு, அகில இந்திய துணைச் செயலாளர் இரா.சரவணன், மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஏ.பொன்னு சாமி, மாநில பொருளாளர் ஏ.வி. சண்முகம் மற்றும் 15 மாநிலங்களின் தலைவர்கள் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் இணைந்து பழங்குடி நலத்துறை ஒன்றிய அமைச்சர் ஜூல் ஓரம் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “அனைத்து மாநிலங்களிலும் (FRA) 2006 உரிமை சட்டபடி அனுபவ நிலங்களுக்கு மனு செய்ததை ஆய்வு மேற்கொண்டு அனை வருக்கும் நிலப்பட்டா வழங்க வேண்டும். பழங்குடி பட்டியலில் இணைக்க புலையன், ஈரோடு மாவட்டம் மலையாளி, குறவன் உட்பிரிவு மற்றும் வேட்டைக்காரன் ஆகிய இனங்களை பழங்குடி பட்டி யலில் சேர்க்க வேண்டும். பழங்குடி மக்களுக்கான ஒன்றிய, மாநில அரசுகளில் உள்ள காலி பணியிடங் களை நிரப்ப வேண்டும். அனைத்து பழங்குடி மக்க ளுக்கும் அரசு வழங்கும் தொகுப்பு வீடுகளின் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram