தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மலைவாழ் மக்கள் சங்கம் ஆதரவு

9 Apr 2026, 5:30 am
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மலைவாழ் மக்கள் சங்கம் ஆதரவு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மலைவாழ் மக்கள் சங்கம் ஆதரவு

சென்னை, ஏப். 8 - 17-வது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென பழங்குடி மக்களை, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. சண்முகம், மாநில பொதுச் செயலாளர் ஆ. பொன்னுசாமி ஆகியோர் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 17-வது சட்டமன்றத் தேர்தலில் பழங்குடி மக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தில் வாழும் பழங்குடி மக்கள் 37 வகை பிரிவினருக்கும், இந்து சாதியினரின் வற்புறுத்தலால் திமுக அரசு பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகள், தொல் பழங்குடியினருக்கான சிறப்பு உட்கூறு திட்டங்களை அமல்படுத்தி அவருக்கு கொண்டு வந்துள்ளது.

2006 வன உரிமைச் சட்டம் மூலம் பல்லாயிரக்கணக்கான நில உரிமைச் சான்று, வன நிலங்களில் ஆடு மாடுகள் மேய்ச்சல் உரிமை, மலைப்பகுதிக்கான சாலை வசதி, மலைப்பகுதியில் மருத்துவமனை கொண்டு வர முன்முயற்சி, உண்டு உறைவிடப் பள்ளி, பழங்குடி மக்களுக்கான இலவச வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடுகள், பழங்குடியினர் மகளிர் பொருளாதார மேம்பாட்டு மானியத் திட்டங்கள் வசதி, பழங்குடி மக்களுக்கு நடைபயிற்சி இச்சான்றிதழ் கிடைத்திட அரசாணை 104 கொண்டு வந்தது.

மேற்கண்ட திட்டங்கள் இடதுசாரி கட்சிகளின் மூலம் திமுக அரசால் முன்னெடுத்து நிறைவேற்றப்பட்டுள்ளன. 2014-ஆம் ஆண்டு பாஜக தலைமை யிலான மோடி அரசு ஒன்றிய ஆட்சியில் வந்த பிறகு பழங்குடி மக்களுக்கு எதிராக பல்வேறு மோசமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பழங்குடி மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்ட நிதியினை வெட்டிச் குறைத்ததும், பழங்குடி மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தை வழங்காமல், பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வருகிறது. எனவே, தமிழகத்தில் பழங்குடி மக்களுக்கு எதிரான திட்டங்களையும், நன்மையும் செய்யாத மதவாத சக்தி களுக்கு துணை போகும் அதிமுக-பாஜக கூட்டணியை பழங்குடி மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

ஒன்றிய-மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை இட ஒதுக்கீட்டின்படி நிரப்பிடவும், ஈரோடு மாவட்ட மலையாளி, புனையன், குறவன், குருமன்ஸ், வேட்டைக்காரன் ஆகிய இன மக்களை பழங்குடி பட்டியலில் சேர்த்திடவும், 2006 வன உரிமைச் சட்டத்தின்படி மலையில் வாழும் மக்க ளுக்கு நிலுவையில் உள்ள வன உரிமைச் சான்று தடையின்றி கிடைத்திடவும் நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்.

அந்த வகையில், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றிட, பழங்குடி மக்கள் அனைத்து நலத்திட்ட உதவிகளையும், உரிமைகளையும் பெற்றிட இடதுசாரிகள் அரவணைக்கும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பழங்குடி மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்திடுமாறு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.