பழங்குடி மக்களுக்குப் பட்டா வழங்கக் கோரி ஜமாபந்தியில் மனு
19 Jun 2026, 12:57 am

பழங்குடி மக்களுக்குப் பட்டா வழங்கக் கோரி ஜமாபந்தியில் மனு

கடலூர், ஜூன் 18- திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களுக்குக் குடிமனைப் பட்டா வழங்கவும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றவும் வலியுறுத்தி, திட்டக்குடியில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் பகுதியில் குடியிருந்து வரும் பழங்குடி மக்களுக்குக் குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும், தாழநல்லூரில் ஏற்கெனவே வழங்கப்பட்ட பட்டா நிலத்தை அளந்து காட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், பழங்குடி மக்களின் குழந்தைகளுக்குச் சாதிச் சான்றிதழ் வழங்கிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பழங்குடி சங்கம் மாவட்டச் செயலாளர் என்.எஸ். அசோகன் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் வி.அன்பழகன், வட்டக்குழு உறுப்பினர் ஆர்.மாயவேல், பழங்குடி சங்க மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் ராஜ்குமார், கார்த்திக், தேன்மொழி, அஞ்சம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்தனர்.