தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிறுத்தப்பட்ட பிஎம் கிஷான் நிதி கேட்டு பழங்குடி மக்கள் ஆட்சியரிடம் மனு

1 Dec 2025, 5:20 pm
நிறுத்தப்பட்ட பிஎம் கிஷான் நிதி கேட்டு பழங்குடி மக்கள் ஆட்சியரிடம் மனு
<p><strong>நிறுத்தப்பட்ட பிஎம் கிஷான் நிதி கேட்டு பழங்குடி மக்கள் ஆட்சியரிடம் மனு</strong></p> <p>உதகை, டிச. 1- முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பழங்குடி யின மக்களுக்கு, நிறுத்தப்பட்ட பிஎம் கிஷான் நிதி மற்றும் அடிப்படை வசதி கள் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்க ளன்று மனு அளித்தனர். நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறை &nbsp;தீர் கூட்டத்தில், தமிழ்நாடு பழங்குடி மக் கள் சங்கம் சார்பில், முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளி யேற்றப்பட்ட 7 கிராமங்களைச் சார்ந்த பழங்குடி மக்களின் அத்தியாவசியத் தேவைகள் குறித்த 13 அம்ச கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், வெளியேற்றப்பட்ட கிராமங்களுக்கு வாரம் இருமுறை நடமாடும் மருத்துவ சிகிச்சை வாகனம் சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டும். பல பழங்குடி கிரா மங்களில் மாலை நேரத்தில் ஆட்டோக் கள் மூலம் மது விற்பனை நடைபெறுவ தைத் தடுத்து, அதனால் பாதிக்கப்ப டும் குடும்பங்களை காக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். முதுமலை &nbsp;புலிகள் காப்பகத்தில் இருந்து வெளி யேற்றப்பட்ட பழங்குடி குடும்பங்களில் 18 வயது பூர்த்தியானவர்களுக்கு மறு குடியமர்வுக்கான நிர்ணயிக்கப்பட்ட Cut-off Date-ஐ, தற்போதுள்ள 2010 - &nbsp;2014 என்ற பரிந்துரையை மாற்றி, 2025 &nbsp;ஆம் ஆண்டு என மாவட்ட மறு குடிய மர்வு குழு மாற்றி அமைத்திட வேண் டும். மேலும், கோத்தகிரி கெங்கரை, மெட்டுக்கல், பாவியூர், கம்பையூர், கொடகூர் ஆகிய கிராமங்களில் வசிக் கும் தொல் பழங்குடியினரான இருளர் &nbsp;மற்றும் குறும்பர் சமூகங்களைச் சார்ந்த &nbsp;சுமார் 120 குடும்பங்களுக்கு, ஒன்றிய அர சின் பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் 2018 &nbsp;முதல் 2021 வரை வழங்கப்பட்டு வந்த &nbsp;நிதியுதவி, 2021 ஆம் ஆண்டு முதல் &nbsp;நிறுத்தப்பட்டுள்ளது. 2006 வன உரிமைச் &nbsp;சட்டத்தின் அடிப்படையில் நில உரி மைச் சான்று வழங்கப்பட்டுள்ளதால், நிறுத்தப்பட்ட பிஎம் கிஷான் நிதி உத வித் திட்டத்தை மீண்டும் பழங்குடி மக்க ளுக்குக் கிடைத்திட உரிய நடவடிக் கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை மனுவாக அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.