அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க மலைவாழ் மக்கள் கோரிக்கை
16 Jul 2026, 11:55 pm
<p><strong>அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க மலைவாழ் மக்கள் கோரிக்கை</strong></p><p>திருவண்ணாமலை, ஜூலை 16– திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைத்தொடர் ஜமுனாமரத்தூர் அருகே உள்ள முட்நாட்டூர் பகுதியில், மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக அனுபவத்தில் வைத்து விவசாயம் செய்து வரும் நிலங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பட்டா வழங்கக் கோரி இப்பகுதியைச் சேர்ந்த 52 பேர் மனு அளித்தனர். ஆனால், அதில் 9 பேருக்கு மட்டுமே பட்டா வழங்குவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை எதிர்த்தும், மனு அளித்துள்ள அனைவருக்கும் பட்டா வழங்க வலியுறுத்தியும், ஜமுனாமரத்தூரில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சரத்குமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் பொன்னுசாமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ப.செல்வன், மலை சங்கத்தின் மாவட்டத் தலைவர் பொன்னுசாமி, நிர்வாகி நடராஜன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் இரா.சிவாஜி, சிபிஎம் வட்டாரச் செயலாளர் இரா.ரவிதாசன், வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
