முந்தய பக்கம்

பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை

4 Nov 2026, 11:39 pm
பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை

பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை

திருவண்ணாமலை, நவ.4-திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம் ஏரி குப்பம், களம்பூர், முக்குறும்பை, கன்னிகாபுரம் சங்கரையா நகர் ஆகிய பகுதி களில் வசிக்கும் ஆறு பழங்குடியினர் குடும்பத்தி னருக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை.

இந்நிலையில், புதன்கிழமை (நவ.4) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பட்டா கேட்டு காத்திருக்கும் பழங்குடி மக்களோடு போளூர் வட்டாட்சியரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் இரா. சிவாஜி, தாலுகா செயலாளர் இரா. ரவிதாசன், நகர செயலாளர் ப.கிருஷ்ணமூர்த்தி, மலை வாழ் மக்கள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ப. ரவி, போளூர் வட்ட குழு உறுப்பினர் ரவிராஜ், கரும்பு சங்க தலைவர் பால முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram