பட்டா நிலத்திற்கு அளவீடு செய்து கொடுக்காமல் அலைக்கழிக்கப்படும் பழங்குடியின மக்கள்
10 Mar 2026, 5:48 pm
<p><strong>பட்டா நிலத்திற்கு அளவீடு செய்து கொடுக்காமல் அலைக்கழிக்கப்படும் பழங்குடியின மக்கள்</strong></p>
<p>கடலூர், மார்ச் 10 - விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றி யத்திற்கு உட்பட்ட வி.சாத்தமங்கலம் கிரா மத்தில் வசித்து வரும் பழங்குடி மக்களுக்கு இலவச மனை பட்டா குடிமனை பட்டா வழங்கிட கோரியும், கடந்த 2024 ஆம் ஆண்டு சாத்தமங்கலத்தில் உள்ள பழங்குடி மக்கள் 10 நபர்களுக்கு ராஜேந்திர பட்டி னம் கிராமத்தில் இலவச மனை பட்டா வழங்கப்பட்டது. அதில் வீடு கட்டுவதற்காக பி.எம் ஜென்மன் வீடு கட்டும் திட்டத்தில் மூல மாக வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டது. பட்டா கொடுக்கப்பட்ட இடத்தினை அளவீடு செய்து கொடுக்கா மல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. உடனடியாக அளவீடு செய்து கொடுக்கக் கோரியும் செவ்வாய்க்கிழமை விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவல கத்தில் பழங்குடி மக்கள் நல சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் என்.எஸ்.அசோகன் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது . இதில் விருத்தாசலம் வட்டாட்சியர் பிரகாஷ் மனுவைப் பெற்றுக் கொண்டு 10 நாட்களுக்குள் கோரிக்கையை நிறை வேற்றி தருவதாக உறுதியளித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் ஆர். கலைச்செல்வன், ஒன்றிய குழு உறுப்பி னர் எஸ்.கனகராசு, பழங்குடி சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் அம்சவள்ளி, மாவட்டக்குழுஉறுப்பினர் அனிதா, உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.</p>
