தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடியிருப்புக்கு பட்டா கேட்டு பழங்குடியின மக்கள் முறையீடு

9 Dec 2025, 4:25 pm
குடியிருப்புக்கு பட்டா கேட்டு பழங்குடியின மக்கள் முறையீடு
<p>குடியிருப்புக்கு பட்டா கேட்டு பழங்குடியின மக்கள் முநாமக்கல், டிச.9- மூலக்குறிச்சி ஊராட்சி பாரதி நகர் கிராமத்தில் 80 ஆண்டுகளுக்கு &nbsp;மேலாக குடியிருந்து வருபவர்க ளுக்கு குடிமனை பட்டா கேட்டு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் சார்பில் பழங்குடியினர் மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாயன்று கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூலக்குறிச்சி ஊராட்சியில் உள்ள பெரிய குறிச்சி அருகே அமைந்துள்ள பாரதி நகர் குக்கிராமத்தில், சுமார் 80 ஆண்டுக ளுக்கும் மேலாக 20க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தாங்கள் குடி யிருக்கும் வீடுகளுக்கு குடிமனைப் பட்டா வேண்டி, இதுவரை சுமார் 25 &nbsp;முறைக்கும் மேல் தமிழ்நாடு முதல மைச்சர், நாமக்கல் மாவட்ட ஆட்சி யர், வருவாய் கோட்டாட்சியர், ராசி புரம் வட்டாட்சியர், ஊராட்சி மன்றத் தலைவர், கிராம சபை கூட்டங்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்தும், இதுவரை அவர்களுக்குப் பட்டா கிடைக்கவில்லை. தற்போது, முறையாக கிராம சபை கூட்டம் நடத்தி, வன உரிமைச் சட்டத்தின்படி வன உரிமைக்குழு வைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் முறைப்படி குடிமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இப்பகுதி மக்களுக்குத் தமிழக அரசு ஏற்க னவே கான்கிரீட் சாலை, தெரு விளக்கு, குடிநீர் இணைப்பு போன்ற &nbsp;அடிப்படை வசதிகளை வழங்கியுள் ளது. மேலும், பொதுமக்கள் தங்கள் &nbsp;வீடுகளுக்கு மின் வசதி மற்றும் வீட்டு வரி வசதியையும் பெற்றுள்ளனர். இத்தனை வசதிகளும் இருந்தும், அவர்களுக்குப் பட்டா வழங்காமல் நீண்ட நாட்களாக அலைக்கழிக்கப் பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்தப் பிரச்சனை யில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வனக்குழு தலைவரும் தலையிட்டு, ஏழை பழங்குடியின மக்களுக்குத் தாமதமின்றி குடிமனைப் பட்டா கிடைத்திட, 2006 வன உரிமைச் சட் டப்படி உரிய ஆவணங்கள் வழங்க வும் விரைந்து நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று வலியு றுத்தி, செவ்வாயன்று ஆட்சியரிடம் &nbsp;மனு அளித்தனர். இந்நிகழ்விற்கு, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் நாமகிரிப் பேட்டை ஒன்றியச் செயலாளர் ஏ.பழ னிச்சாமி தலைமை வகித்தார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி.கண் ணன், ஒன்றியச் செயலாளர் வி.பி.சபாபதி மற்றும் பழங்குடியின மக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.</p> <p>றையீடு</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.