தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புலி தாக்கி பழங்குடியினத்தவர் பலி: பொதுமக்கள் மறியல்

24 Feb 2026, 3:55 pm
புலி தாக்கி பழங்குடியினத்தவர் பலி: பொதுமக்கள் மறியல்
<p><strong>புலி தாக்கி பழங்குடியினத்தவர் பலி: பொதுமக்கள் மறியல்</strong></p> <p>உதகை, பிப்.24- உதகை அருகே பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் புலி தாக்கி உயிரிழந்த &nbsp;சம்பவத்தை தொடர்ந்து, அந்த புலியை &nbsp;உடனடியாக பிடிக்க வேண்டும் என வலி யுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை &nbsp;மறியலில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை - கூடலூர் &nbsp;சாலையிலுள்ள சின்ன காடிமந்து பகுதி யில் பழங்குடியின மக்கள் வசித்து வரு கின்றனர். இந்நிலையில், அப்பகுதியை &nbsp;சேர்ந்த புஷ்தாள் குட்டன் (57) என்பவர் &nbsp;திங்களன்று இரவில் தனியாக மேல் காடி &nbsp;மந்துக்கு சென்றுள்ளார். நீண்ட நேர மாகியும் அவர் வீடு திரும்பாததால், அவ ரது குடும்பத்தினர் தேடியுள்ளனர். தொடர்ந்து, செவ்வாயன்று காலையும் &nbsp;அவர் வீடு திரும்பாததால், சந்தேகம டைந்த அவரது குடும்பத்தினர் அருகே &nbsp;உள்ள சோலைக்கு சென்று தேடிய போது, ஒரு புதரில் பாதி உடல் தின்ற &nbsp;நிலையில் புஷ்தாள் குட்டன் உடல் கிடந் துள்ளது. இதைப் பார்த்த உறவினர்கள் &nbsp;வனத்துறை மற்றும் காவல் துறையின ருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உதகை வனச்சரகர் ராம் பிரசாத், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். இத னிடையே, ஆட்கொல்லி புலியை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி பழங்குடியின மக்கள் கூடலூர் - உதகை &nbsp;சாலையில் சோலூர் சந்திப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப் போது, போலீசார் மற்றும் வனத்துறையி னர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை &nbsp;நடத்தி, ஆட்கொல்லி புலியை பிடிக்க &nbsp;உடனடியாக கூண்டு வைப்பதாக கூறிய தையடுத்து. மறியல் கைவிட்டப்பட்டது. அதன் பிறகு போலீசார் உடலை மீட்டு உதகை மருத்துவக்கல்லூரி மருத் துவமனைக்கு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர். புலி தாக்கி பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் உயி ரிழந்தது அப்பகுதி மக்களிடையே அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது. வன &nbsp;விலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள &nbsp;பகுதிகளில் பொதுமக்கள் தேவை யின்றி செல்ல வேண்டாம். இரவு நேரங் களில் தனியாக வெளியே செல்ல வேண் டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி யுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.