அமைச்சருடன் மலைவாழ் மக்கள் சங்க தலைவர்கள் சந்திப்பு
2 Jun 2026, 9:21 pm
<p><strong>அமைச்சருடன் மலைவாழ் மக்கள் சங்க தலைவர்கள் சந்திப்பு</strong></p><p>தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுவை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு உள்ளிட்ட தலைவர்கள் செவ்வாயன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, இத்துறையின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்பதற்கு பதிலாக “(Hills) மலைப் பழங்குடிகள்” என்று உள்ளதை உடனடியாக தலையிட்டு மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன்பேரில் அமைச்சரும், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்” என்று வருவதற்கான நடவடிக்கைகள் அமலுக்கு வரும் என்று உறுதி அளித்தார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், பொருளாளர் கே.பி.பெருமாள், மாநிலச் செயலாளர் பி.பெருமாள், மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.அனு ஆகியோர் உடனிருந்தனர்.</p>
