தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாதியில்நின்ற பழங்குடியினர் தொகுப்பு வீடுகள் நடவடிக்கை எடுக்க மலைவாழ் மக்கள் வலியுறுத்தல்

7 Oct 2026, 2:04 am
பாதியில்நின்ற பழங்குடியினர் தொகுப்பு வீடுகள் நடவடிக்கை எடுக்க மலைவாழ் மக்கள் வலியுறுத்தல்

பாதியில்நின்ற பழங்குடியினர் தொகுப்பு வீடுகள் நடவடிக்கை எடுக்க மலைவாழ் மக்கள் வலியுறுத்தல்

திருவள்ளூர், அக். 6-அரசுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு பழங்குடி யினருக்கான தொகுப்பு வீடுகளைக் கட்டாமல் பாதியிலேயே விட்டுச் சென்ற ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து, பருவமழைக்கு முன் வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருத்தணியை அடுத்த வி.கே.என்.கண்டிகையில் வசிக்கும் 35 பழங்குடியின குடும்பங்களுக்கு, மலை வாழ் மக்கள் சங்கத்தின் போராட்டத்தால் மாற்று இடத்தில் பட்டா வழங்கப் பட்டு, பிஎம் ஜென்மன் திட்டத்தின்கீழ் தொகுப்பு வீடுகள் ஒதுக்கப்பட்டன. வீடுகளைக் கட்டுவதற்காகப் பஞ்சாயத்து ஒன்றியப் பணி மேற்பார்வையாளர் சுந்தரேசனின் வழிகாட்டு தலின்படி, ஒப்பந்ததாரர் கோவிந்தசாமி என்ப வரிடம் பணிகள் ஒப்படைக்கப் பட்டன. ஆனால், அவர் மக்களிடமிருந்து முழுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, பட்டா மற்றும் பணி ஆணைகளை எடுத்துச் சென்றதுடன் வீடு களை அரைகுறையாக விட்டுச் சென்றுள்ளார். சில வீடுகளில் கழிவறைக் கதவுகளையும் கழற்றிச் சென்றுள்ளதாகக் கூறப் படுகிறது.

இதனால் பாதிப் படைந்துள்ள பழங்குடியின மக்களுக்கு உடனடியாக வீடுகளைக் கட்டி முடிக்கக் கோரி, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, கிளை நிர்வாகிகள் தேவி, பிரபாவதி ஆகியோர் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வியிடம் செவ்வாயன்று (அக். 6) புகார் மனு அளித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.