முந்தய பக்கம்

பழங்குடியினருக்கான வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி மனு

8 Jul 2026, 10:55 pm
பழங்குடியினருக்கான வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி மனு
<p><strong>பழங்குடியினருக்கான வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி மனு</strong></p><p>திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் வட்டாரம், அல்லியந்தல் மேட்டுக்குடிசை பகுதியில் வசிக்கும் 4 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி, சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், அதன் மாவட்டச் செயலாளர் அய்யனார் தலைமையில் இந்த மனு அளிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், பாரி, பெரணமல்லூர் வட்டாரச் செயலாளர் பிரபாகரன், சேத்துப்பட்டு வட்டாரச் செயலாளர் எல்லப்பன் மற்றும் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் கலந்துகொண்டனர். நீண்டகாலமாக வீட்டு மனைப்பட்டா இன்றி தவிக்கும் தங்கள் குடும்பங்களுக்கு அரசு உடனடியாக உதவி செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram