மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மலைவாழ் மக்கள் சங்கம் ஆதரவு
9 Apr 2026, 5:30 am

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மலைவாழ் மக்கள் சங்கம் ஆதரவு

சென்னை, ஏப். 8 - 17-ஆவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென பழங்குடி மக்களான, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லி பாபு, மாநில பொதுச் செயலாளர் ஆ. பொன்னுசாமி ஆகியோர் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

17-ஆவது சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்கு அளித்து வெற்றிபெறச் செய்வது பழங்குடி மக்களின் கடமையாகும். தமிழகத்தில் வாழும் பழங்குடி மக்கள் 37 வகை பிரிவினருக்கும், இந்து சாதியினரின் வற்புறுத்தலால் திமுக அரசு பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகள், தொல் பழங்குடியினருக்கான சிறப்பு உட்கூறு திட்டங்களை அமல்படுத்தி வலுவாக்கிக் கொண்டு வந்துள்ளது.

2006 வனஉரிமைச் சட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான நில உரிமைச் சான்று, வன நிலங்களில் ஆடு மாடுகள் மேய்ச்சல் உரிமை, மலைப்பகுதிக்கான சாலை வசதி, மலைப்பகுதியில் மருத்துவமனை கொண்டு வர முன்முயற்சி, உண்டு உறைவிடப் பள்ளி, பழங்குடி மக்களுக்கான இலவச வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடுகள், பழங்குடியினர் மகளிர் பொருளாதார மேம்பாட்டு மானியத் திட்டங்கள் வசதி, பழங்குடி மக்களுக்கு நடைபயிற்சி இன்றி இலவசமாகச் கிடைத்த இட வசதி என 104 கொண்டு வந்தது.

2014-ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மோடி அரசு ஒன்றிய ஆட்சியில் வந்த பிறகு பழங்குடி மக்களுக்கு எதிராக பல்வேறு மோசமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பழங்குடி மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்ட நிதியினை வெட்டிச் சுருக்குவதும், பழங்குடி மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தை வழங்காமல், பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வருகிறது.

எனவே, தமிழகத்தில் பழங்குடி மக்களுக்கு எவ்விதமான திட்டங்களையும், நன்மையையும் செய்யாத மதவாத சக்தி அடுக்கு ஒன்றிய பாஜக-அதிமுக-பாஜக கூட்டணியை பழங்குடி மக்கள் புறக்கணிக்க வேண்டும். அந்த வகையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பழங்குடி மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்திடுமாறு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.