நீலகிரியில் கருப்பு கேரட் உற்பத்திக்கான சோதனை
16 Nov 2025, 3:30 pm
<p><strong>நீலகிரியில் கருப்பு கேரட் உற்பத்திக்கான சோதனை</strong></p>
<p>உதகை, நவ.16- நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையினர் புதிய முயற்சியாக கருப்பு கேரட் உற்பத்திக்கான சோதனையில் ஈடுபட்டு வரு கின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா வில் உள்ள நர்சரியில் தோட்டக்கலைத்துறை சார்பில் முதன் முறையாக கருப்பு கேரட் உற் பத்திக்கான சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்காக தில்லியில் இருந்து விதைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. நர்சரி யில் அந்த விதைகள் விதைக்கப்பட்டன. அத் துடன் தோட்டக்கலைத்துறை மூலம் தயாரிக் கப்பட்ட மண்ணுயிர் உரம் இடப்பட்டது. இந்த பணியில் பூங்கா மேலாளர் லட்சுமணன் தலை மையில் தோட்டக்கலை பணியாளர்கள் ஈடு பட்டனர். கருப்பு கேரட் 3 முதல் 3½ மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும். இவை வட மாநி லங்களில் கேக் உள்பட பல்வேறு உணவு வகைகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வரு கின்றன. நீலகிரியில் பெரும்பாலான இடங்க ளில் இளஞ்சிவப்பு (ஆரஞ்சு) நிற கேரட் விளைவிக்கப்பட்டு வரும் நிலையில், தற் போது புதிய முயற்சியாக கருப்பு நிற கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி மேற் கொள்ளப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தோட்டக்கலைத் துறை யினர் கூறுகையில், கருப்பு கேரட் விதைத்து, அதன் வளர்ச்சியை குறித்து ஆய்வு செய்யப் பட உள்ளது. வளர்ந்த பிறகு, அதில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட உள்ளது. இந்த வகை கேரட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக ரிக்கும் என தெரிய வந்துள்ளது. மேலும் இதில், பொட்டாசியம், வைட்டமின் கே ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சோப்பு தயாரிப் பில் இயற்கை வர்ணத்துக்காகவும் இதை தற் போது பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித் துள்ளனர்.</p>
