இடைக்கால நிவாரணம் கேட்டு டிஆர்இயு ஆர்ப்பாட்டம்
13 Nov 2025, 3:30 pm
<p><strong>இடைக்கால நிவாரணம் கேட்டு டிஆர்இயு ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>உதகை, நவ.13- 30 சதவிகிதம் இடைக்கால நிவா ரணம் வழங்க வேண்டும் என வலியு றுத்தி டிஆர்இயு சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ரயில்வே தொழிலாளர்களுக்கு 8 ஆவது ஊதியக் குழுவை உடனடி யாக அமைக்க வேண்டும். இடைப் பட்ட காலத்திற்கு 30 சதவிகித இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். அடிப்படை சம்பளத் தில் 50 சதவிகிதம் பஞ்சப்படியை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தட் சிண ரயில்வே எம்பிளாயீஸ் யூனி யன் (டிஆர்இயு) – சிஐடியு சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நீலகிரி மாவட்டம், குன் னூர் ரயில் நிலையம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தின் கிளைத் தலைவர் பெரோஸ் கான் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ரபீக் வரவேற்றார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் சி. வினோத் கோரிக்கைகளை விளக் கிப் பேசினார். கிளைப் பொருளா ளர் பழனிசாமி நன்றி கூறினார். இதில் திரளான ரயில்வே தொழிலா ளர்கள் பங்கேற்றனர். ஈரோடு ஈரோடு ரயில் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, டிஆர்இயு கிளைச் செயலாளர் எம். மதுரைவீரன் தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் எம்.முருகே சன், துணைச்செயலாளர் கே.பிஜு, ஓடும் ரயில் தொழிலாளர் சங்க கோட்டச் செயலாளர் எஸ்.அருன் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். திரளான ஊழியர்கள் பங்கேற்ற னர்.</p>
