முந்தய பக்கம்

டிஆர்இயு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

16 Dec 2025, 3:51 pm
டிஆர்இயு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
<p><strong>டிஆர்இயு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, டிச.16- &nbsp;திருச்சி ரயில்வே கோட்டம் இன்ஜினியரிங் பிரிவில் உள்ள 400-க்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்ப போர்க்கால அடிப்படையில் முயற்சி எடுக்காததையும், திருச்சிராப்பள்ளி - தஞ்சாவூர் இரட்டை வழி பாதையில் ஸ்பெஷல் கிளாஸ் கேட் எல்.சி 312, 317 (50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்லும்)உள்ளிட்ட கேட்டுகளில் இன்றளவும் 12 மணி நேர வேலை வாங்கும் அவலத்தை கண்டித்தும் டி.ஆர்.இ.யு திருச்சி கோட்டம் சார்பில் செவ்வாய்க்கிழமை தென்னக ரயில்வே கோட்ட அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. &nbsp;ஆர்ப்பாட்டத்திற்கு டி.ஆர்.இ.யு கோட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணைபொதுச் செயலாளர்கள் சரவணன், ராஜா, பி.கே. மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். &nbsp;கோட்டச் செயலாளர் கரிகாலன், கோட்ட உதவி தலைவர் பலராம், கோட்ட உதவி செயலாளர்கள் ரஜினி, அழகிரி, செந்தில்குமார் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram