தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பலத்த காற்றுக்கு வேரோடு சாய்ந்த மரங்கள்

19 Mar 2026, 3:18 pm
பலத்த காற்றுக்கு வேரோடு சாய்ந்த மரங்கள்
<p><strong>பலத்த காற்றுக்கு வேரோடு சாய்ந்த மரங்கள்</strong></p> <p>திருப்பூர், மார்ச் 19- திருப்பூர் மற்றும் சேலம் மாவட் டத்தில் புதன்னறு பெய்த மழை &nbsp;மற்றும் பலத்த காற்றால் பல்வேறு &nbsp;பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதி கரித்து காணப்படுகிறது. இருப்பி னும், கடந்த இரண்டு நாட்களாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. அதன் படி, புதனன்று மாலை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மேலும், பலத்த காற்றும் வீசியது. &nbsp;இதனால் திருப்பூர் மாநகரின் பல் வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து &nbsp;விழுந்தன. மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் ஏராளமான மரங் கள் மக்களுக்கு நிழல் தரும் வகை யில் இருந்த நிலையில், பலத்த காற் றால் பழமை வாய்ந்த மரங்கள் சில &nbsp;வேருடன் முறிந்து விழுந்தன. இதே போல திருப்பூர் தென்னம்பாளை யம் அருகே சூரியன் நகர் பகுதி யில் 3 மாடி கொண்ட தனியார் நிறு வனத்தின் மேற் பகுதியில் அமைக் கப்பட்டிருந்த மேற்கூரை சரிந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதி யில் விழுந்ததில், 5 ஓட்டு வீடுகள் &nbsp;சேதமடைந்தன. தகர கூரைகள் &nbsp;விழுந்ததில் வீட்டிலிருந்த பொருட் களும் சேதமடைந்தன. இதில் &nbsp;5க்கும் மேற்பட்டோர் காயமடைந்த னர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். வாழை மரங்கள் சேதம் இதேபோன்று, அவிநாசி மற் றும் அதன் சுற்றுவட்டார பகுதிக ளில் சூறைக்காற்றுடன் கனமழை &nbsp;பெய்ததால், மின்கம்பிகள் துண்டிக் கப்பட்டு, மின் விநியோகம் தடை பட்டது. அசநல்லிபாளையம் பகுதி யில் இடி தாக்கியதில், தென்னை &nbsp;மரம் தீப்பிடித்து எரிந்தது. வேட்டு வபாளையம், ஆலத்தூர், கானூர், &nbsp;பொங்கலூர், தண்டுக்காரம்பாளை யம், பாப்பாங்குளம், முறியாண்டம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 40 &nbsp;ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறு வடைக்கு தாயராக குழை &nbsp;தள்ளிய நிலையில் இருந்த வாழை &nbsp;மரங்கள் சேதமடைந்தனர். இத னால் நட்டத்திற்குள்ளாகியுள்ள வாழை விவசாயிகள், உரிய இழப் பீடு வழங்க வேண்டும் என வலியு றுத்தியுள்ளனர். சேலம் சேலம் மாவட்டம், சங்ககிரி &nbsp;அருகே தேவண்ணாக்கவுண்ட னூர் ஊராட்சி கிடையூர் பகுதியில் &nbsp;விவசாயிகள் பல ஏக்கர் பரப்பள வில் வாழை சாகுபடி செய்துள்ள னர். இந்நிலையில் புதனன்று இரவு &nbsp;திடீரென சூறைக்காற்றுடன் கூடிய &nbsp;கனமழை பெய்தது. &nbsp;இதனால், அப்பகுதியில் பயி ரிடப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட &nbsp;வாழை மரங்கள் தாருடன் சாய்ந்து &nbsp;சேதமடைந்தன. அறுவடைக்கு இன்னும் சில நாட்களே உள்ள &nbsp;நிலையில் விவசாயிகள் செய்வதறி யாது தவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சேதம டைந்த வாழைத் தோட்டத்தை தோட்டக்கலை துறையினர் நேரில் &nbsp;ஆய்வு செய்து உரிய இழப்பீடு &nbsp;வழங்க வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.