தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

12 Dec 2025, 2:40 pm
திருச்சி விரைவு செய்திகள்

வேட்டணிவயல் தொடக்கப்  பள்ளியில் மரம் நடுவிழா

அறந்தாங்கி, டிச.12-  புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வேட்டணிவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரம் நடும் விழாவினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் தொடங்கி வைத்தார்.  இவ்விழாவில், அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் கலாராணி, புதுக்கோட்டை மாவட்ட உதவி திட்ட அலுவலர் செந்தில், பள்ளித் துணை ஆய்வாளர் இளையராஜா, வட்டாரக் கல்வி அலுவலர் செழியன், மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம், இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் மற்றும் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

2026 “கபீர் புரஸ்கார்” விருதுக்கு  விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

திருச்சிராப்பள்ளி, டிச.12-  2026 ஆம் ஆண்டிற்கான “கபீர் புரஸ்கார் விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா ரூ.20,000, ரூ10,000 மற்றும் ரூ.5000-க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை தகுதியுடையோர்க்கு வழங்கப்படுகிறது.  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசு பணியாளர்கள் ஆகியோர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இவ்விருதினைப் பெறத் தகுதியுடையவராவர். மேலும், இவ்விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது வீரம் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் 15.12.2025 அன்று அல்லது அதற்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி (தொலைபேசி எண்.0431-2420685) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

மணமேல்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம்

அறந்தாங்கி, டிச.12-  விவசாயிகள் சங்க புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கராத்தே செல்வராஜ் தலைமை வகித்தார்.  கூட்டத்தில், டிசம்பர் 23 உலக விவசாயிகள் தினத்தை விழாவாக நடத்துவது. நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கி மற்றும் இதர வங்கிகளில் வழங்கப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். டிட்வா புயல், மழையில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு தொகை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்றிய தலைவர் கரூ. ராமநாதன் விளக்கி பேசினார்.  ஒன்றிய துணைத் தலைவர் காதர் பாட்சா, செல்லத்துரை, கே.வி.எஸ். ஜெயராமன், ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.