முந்தய பக்கம்

லாரி மீது விழுந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

11 Apr 2026, 5:30 am
லாரி மீது விழுந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

லாரி மீது விழுந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

ஓசூர், ஏப்.10- ஓசூர் முதல் மன்னார் வரைக்கும் வரை தென்கனிக்கோட்டை, உள்ளிட்ட தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழன்று மாலை பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. இதில், குன்னூர் - உதகை சாலையில் அருவங்காடு பகுதியில் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். இதன் காரணமாக குன்னூர் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram