போக்குவரத்தை தனியார் மயமாக்கும் சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் ஜன.22-இல் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
9 Jan 2026, 3:41 pm
<p><strong>போக்குவரத்தை தனியார் மயமாக்கும் சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் ஜன.22-இல் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>சென்னை, ஜன. 9 - போக்குவரத்தை தனியார் மயமாக்கும் சட்டத் திருத்ததை எதிர்த்து ஜன.22 அன்று தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகத்தில், 2016-2017 ஆம் ஆண்டு 20,839 வழத்தடங்களில் 23, ஆயிரத்து 78 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அப்போது 1.40 லட்சம் தொழிலாளர்கள் இருந்தனர். தற்போது 18,674 வழித்தடங்களில் 20,508 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரு லட்சத்து 7 ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர். பேருந்துகளின் எண்ணிக் கையை குறைத்து தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் நோக்கத்தோடு அதிமுக ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் 288(ஏ) என்ற புதிய விதி சேர்க்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுத்து இயக்கப்படுகின்றன. விதி 288(ஏ)-வை மேலும் திருத்தம் செய்ய தமிழக அரசு 24.12.2025 அன்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது, தனியார் பேருந்துகளை நிரந்தரமாக குத்தகைக்கு எடுத்து இயக்கலாம் என திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக் கழகங்களை சீர்குலைத்து தனியார்மய நடவடிக்கைக்கு வழிவகுக்கும். இந்நிலையில் போக்கு வரத்துக் கழகங்களில் செயல் படும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் ஜன.8 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, பணியாளர் சம்மேளனம் ஆகிய அமைப் புகள் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில், இந்த திருத்தத்தை கைவிட வலியுறுத்தி ஜன.22 அன்று அனைத்து மண்டலங்களிலும் ஆர்ப்பாட்டம், நுழைவுவாயில் கூட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.</p>
