ரூ. 3,637 கோடி அகவிலைப்படி நிலுவையை கேட்டு போக்குவரத்து ஓய்வூதியர்கள் போராட்டம்
16 Jul 2026, 9:01 pm

ரூ. 3,637 கோடி அகவிலைப்படி நிலுவையை கேட்டு போக்குவரத்து ஓய்வூதியர்கள் போராட்டம்

சென்னை, ஜூலை 16 - 3 ஆயிரத்து 637 கோடி ரூபாய் அகவிலைப்படி நிலுவைத் தொகை யை வழங்கக் கோரி வியாழனன்று (ஜூலை 16) தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் 8 அரசுப் போக்கு வரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற 96 ஆயிரம் ஓய்வூதியர்கள் உள்ள னர்.

இவர்களுக்கு நிர்வாகமானது பணப்பலன்களை முறையாக வழங்குவதில்லை. குறிப்பாக, 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வழங்க வேண்டிய அகவிலை ப்படி உயர்வை நிர்வாகம் வழங்க வில்லை. இதனை எதிர்த்து தொட ரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தரவிட்டது. இதன்படி 3 ஆயிரத்து 637 கோடி ரூபாயை நிர்வாகம் வழங்க வேண் டும்.

திமுக அரசு தீர்ப்பை செயல் படுத்தாததால், நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் நல அமைப்புகளின் சம்மேளனம் சார்பில் போக்கு வரத்து கழக மண்டல அலுவலகங் கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2

026 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுக்கால பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் மருத்து வக் காப்பீடு திட்டத்தை செயல்ப டுத்த வேண்டும், வாரிசு வேலை வழங்க தடையாக உள்ள அரசா ணையை ரத்து செய்து, காத்தி ருக்கும் 5 ஆயிரம் பேருக்கு பணி வழங்க வேண்டும், அகவிலைப்படி நிலுவையை விரைந்து வழங்க வேண்டும், 1.4.2003க்கு பிறகு பணி யில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்கள் / இறந்த வாரிசுதாரர்கள் அனை வரையும் ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை பல்லவன் இல்லம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நல அமைப்பின் தலைவர் டி.குருசாமி தலைமையில் நடை பெற்ற இந்த போராட்டத்தில் சம்மேளன பொதுச் செயலாளர் எஸ். நடராஜன், பொருளாளர் எஸ். ஆதி மூலம், நல அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ். குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர்கள் டி. ஆறுமுகம், எஸ். அசோகன், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர். துரை, சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர்.