முந்தய பக்கம்

போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

8 Dec 2025, 4:39 pm
போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
<p><strong>போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>தருமபுரி, டிச. 8- அரசு போக்குவரத்துக்கழகத்தை தனியார்மயமாக்கும் &nbsp;நடவடிக்கையை கண்டித்து தருமபுரி போக்குவரத்து கழக &nbsp;தலைமை அலுவலகம் முன்பு, சிஐடியு போக்குவரத்துக் &nbsp;கழக ஊழியர்சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டுவந்துள்ள சட்ட தொகுப்புகளை திரும்பபெற வேண்டும். தொழிற்சங்க உரிமை, கூட்டு பேர உரிமையை பறிக்ககூடாது. &nbsp;மின்சார &nbsp;பேருந்துகளை போக்குவரத்துக்கழகங்களே இயக்க வேண் டும். போக்குவரத்துக்கழகங்களில் காண்ட்ராக்ட் முறையை கைவிட வேண்டும். தருமபுரி மண்டல நிர்வாகம் சிறு, சிறு தவ றுகளுக்கு அநியாய தண்டனைகள் வழங்கக்கூடாது. நிலை யாணை விதிகளையும் ஒப்பந்தத்தையும் மீறி செயல்படாக் கூடாது. தொழிலாளர்கள் போராடி பெற்ற சட்டப்படியான விடுப்புகளை வழங்க மறுக்க கூடாது உள்ளிட்ட கோரிக் கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டலத் தலைவர் எஸ். சண்முகம் தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைத்தலைவர் சி. &nbsp;நாகராசன், சங்கத்தின் மண்டல பொதுச்செயலாளர் சி. ரகு பதி, பொருளாளர் என். மயில்சாமி உள்ளிட்டோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram