முந்தய பக்கம்

எரிவாயு உருளை குறித்து வெளிப்படைத் தன்மை

21 Mar 2026, 2:42 pm
எரிவாயு உருளை குறித்து வெளிப்படைத் தன்மை
<p><strong>எரிவாயு உருளை குறித்து வெளிப்படைத் தன்மை</strong></p> <p>வணிகர்கள் கோரிக்கை திருப்பூர், மார்ச் 21- பல்லடம் பகுதியில் எரிவாயு முகவர்கள் தங்களது இருப்பு குறித்து வெளிப்படைத் தன்மையுடன் பொதுமக்களுக்கு அறிவிப்பு &nbsp;வெளியிட வேண்டும் என அனைத்து &nbsp;வணிகர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி யுள்ளனர். இது குறித்து அச்சங்கத்தினர் பல்லடம் வட்டாட்சியர் கோவிந்தசாமியிடம் வெள்ளி யன்று அளித்த மனுவில் கூறியிருப்பதா வது: பல்லடம் பகுதிகளில் வணிக எரிவாயு பயன்படுத்திவரும் தொழில் நிறுவனங் கள், உணவகங்கள், எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக இயங்க முடி யாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு வணிகரீதியலான எரிவாயு உருளை களை போதுமான அளவு இருப்பு உள்ளது என்று அறிவித்தும், வணிகர்களுக்கு கிடைப்பதில்லை. அதே சமயம் கள்ள &nbsp;சந்தையில் வணிக ரீதியான எரிவாயு உரு ளைகள் தராளமாக கிடைப்பதாக தெரிய வருகிறது. எனவே எரிவாயு முகவர்கள் தங்களது இருப்பு குறித்து வெளிப்படைத் தன்மையுடன் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும். தங்களது அலுவ லகத்தில் உள்ள தகவல் பலகையில் விவ ரங்களை வெளியிட வேண்டும். மேலும் எரி வாயு உருளைகளை பதுக்கி விற்பனை செய் பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவிப்புபடி பொதுமக்களை பாதிக் காத வகையில் எரிவாயு உருளை விநியோ கத்தை முறைப்படுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram