தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

19 Jun 2026, 2:42 am
தீக்கதிர் முக்கிய செய்திகள்

மனு கொடுக்க வந்த திருநங்கைகள் தடுத்து நிறுத்தம் போர் நினைவுச் சின்னம் அருகே போராட்டம்

சென்னை, ஜூன் 18- தங்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் மனு அளிப்பதற்காகச் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகளைக் காவல்துறை யினர் தடுத்து நிறுத்தினர். எந்தவிதக் காரணமும் கூறாமல் தங்களைத் தடுத்து நிறுத்தியதால் அதிருப்தியடைந்த திருநங்கைகள், போர் நினைவுச் சின்னம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், திருநங்கைகள் தரப்பில் இருந்து 4 பிரதிநிதி களை மட்டும் முதலமைச்சரிடம் நேரில் அழைத்துச் சென்று மனு அளிக்க உரிய ஏற்பாடு செய்வதாகக் காவல்துறையினர் உறுதியளித்தனர். மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட மற்றவர்களைச் சுற்றுலாத்துறை மைதானத்தில் காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன்பின் ஊடகங்களிடம் பேசிய திருநங்கைகள், “சமூகத்தில் திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கான அனைத்து அத்தியாவசியக் கோரிக்கைகளும் இந்த மனுவில் இடம்பெற்றுள்ளன. மனு கொடுக்க வந்த எங்களைத் தடுத்து நிறுத்துவது சமூக நீதிக்கு எதிரானது ஆகும். எல்லாருக்குமான அரசு என்று மேடை களில் சொல்லிவிட்டு, நடைமுறையில் எங்களை வஞ்சிக்கிறார்கள்” என்று கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஒரு குறிப்பிட்ட திருநங்கை மொத்த திருநங்கை சமூகத்தையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாகவும், அவர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

40 ஆர்டிஓ அலுவலகங்களில் சோதனை ரூ.32 லட்சம் பறிமுதல்

சென்னை, ஜூன் 18 - தமிழ்நாட்டில் பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடந்த சோதனையில் ரூ. 32 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 40 ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வியாழக்கிழமை காலை முதல் சோதனையிட்டனர். சென்னை, திருச்சி, வேலூர், நெல்லை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 40 அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. லஞ்சப் புகார்கள் குவிந்ததால் லஞ்ச ஒழிப்புத்துறை இந்த அதிரடி சோதனையை நடத்தியதாக கூறப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.