தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

2 Jan 2026, 3:33 pm
திருச்சி விரைவு செய்திகள்

போடி பேருந்து நிலையத்தில்  இறந்து கிடந்த மாற்றுப் பாலினத்தவர்

தேனி , ஜன. 2- போடியில் வெள்ளிக்கிழமை, பேருந்து நிலையத்தில் மாற்றுப் பாலினத்தவர் இறந்து கிடந்தது குறித்து காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் . தேனி மாவட்டம், போடி அருகே மேலச்சொக்கநாத புரத்தை சேர்ந்தவர் சொக்கன் மகன் ராமகிருஷ்ணன் (51). இவர் மாற்றுப் பாலினத்தவர். இவருக்கு மதுப் பழக்கம் இருந்துள்ளது. உடல்நிலை சரியில்லாமல் இருந் துள்ளார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை போடி பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து இவரது உறவினர் பொன்னையன் (51) கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலை யத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பெரியகுளம் அருகே டிப்பர் லாரி மோதி போலீசார் படுகாயம்

தேனி , ஜன.2-  பெரியகுளம் அருகே டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் தேவதானப்பட்டி காவல் நிலைய முதல்நிலை காவலர் படுகாயமடைந்தார் .  ஜெயமங்கலத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராமநாதன் (32).தென்கரை காவல் நிலைய குடியிருப்பில் வசித்து வரும் இவர் ,தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார் .சம்பவ நேரத்தில் இருசக்கர வாகனத்தில் தேவதானப்பட்டி சென்று கொண்டிருந்த போது எதிர்புறமாக வந்த டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது .இந்த சம்பவத்தில் தலையில் ரத்த காயமடைந்த ராமநாதன் ,பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது .பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இந்த சம்பவம் குறித்து டிப்பர் லாரி ஓட்டுநரான பெரியகுளம் தென்கரையை சேர்ந்த சூரியன் மகன் பிச்சைமணி மீது பெரியகுளம் காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளர் தெய்வ கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .

குறைந்த விலையில் மின்னணு பொருள்கள் தருவதாக கூறி  பண மோசடி செய்தவர் கைது

தூத்துக்குடி, ஜன. 1- ஆன்லைனில் சவுண்ட் சா்வீஸ் பொருள்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதாக முகநூல் மூலம் அறிமுகமாகி ரூ. 1லட்சத்து 42 ஆயிரம் பணத்தை மோசடி செய்த திருப்பூரைச் சோ்ந்த இளைஞரை தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டத்தில் சவுண்ட் சா்வீஸ் தொழில்  செய்து வரும் ஒருவருக்கு முகநூல் மூலம் அறிமுக மாகிய நபா், தன்னிடம் குறைந்த விலையில் ஆம்ப்ளிபை யா், ஸ்பீக்கா்கள், மின்னணு பொருள்கள் விற்பனைக்கு இருப்பதாக கூறியுள்ளாா். அதை நம்பி, அவா் கேட்ட தொகை ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்தை தூத்துக்குடி நபா் ஆன்லைனில் அனுப்பினாா். அதன்பிறகு பணம் அனுப்பியவருக்கு பொருள்கள் வந்துசேரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அவர், தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.  அதன்பேரில் சைபா் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பா ளா் (பொ) தீபு மேற்பாா்வையில் சைபா் குற்றப் பிரிவு  ஆய்வாளா் சாந்தி, போலீசார் விசாரணை மேற்கொண்ட னர்.இதில் திருப்பூா் காந்தி நகரைச் சோ்ந்த சதீஷ்குமாா் (35) என்பவா் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை யிலடைத்தனா். இதுகுறித்து, சைபா் குற்றப்பிரிவு போலீ சார் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசு ரப்பர் கழகத்தின் சிஎல்ஆர் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக!  வனத்துறை அமைச்சருக்கு சிஐடியு சங்கம் கோரிக்கை

குலசேகரம், ஜன.2-   அரசு ரப்பர் கழகத்தில் வேலை செய்யும் சிஎல்ஆர் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வனத்துறை அமைச்சருக்கு கன்னியாகுமரி மாவட்ட எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியன்(சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வனத்துறை அமைச்சருக்கு சிஐடியு எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியனின் மாவட்ட பொதுச்செயலாளர் எம்.வல்சகுமார் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசு ரப்பர் கழகத்தில்  300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தப்படாமல் சிஎல்ஆர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். 2001 ஆம் ஆண்டு வரை வேலை செய்த 365 தொழிலாளர்களை 2007 இல் கலைஞர் ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் நிரந்தரப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் நிரந்தரம் செய்யப்பட்டு வேலை செய்து வருகிறார்கள். இதற்கு பின்பு இதுவரை எந்த தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்யவில்லை .இதனால் அரசு ரப்பர் கழகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதால் சிஎல்ஆர் தொழிலாளர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். மேலும் சிஎல்ஆர் தொழிலாளர்களுக்கு 2015 வரை வழங்கி வந்த விடுப்பு ஊதியம், ஈட்டிய விடுப்பு உட்பட திடீரென மறுக்கப்பட்டு இதுவரை வழங்கவில்லை. எனவே அரசு ரப்பர் கழகத்தில் உள்ள சிஎல்ஆர் பிரிவில் வேலை செய்யும் அனைத்து பகுதி சிஎல்ஆர் தொழிலாளர்களுக்கும் மறுக்கப்பட்ட சலுகைகளை வழங்க வேண்டும். அவர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

போடி,தேனியில் விடிய விடிய மழை  போடி மெட்டு அருகே மண்சரிவு

தேனி ,ஜன.2- தேனி ,போடியில் வியாழனன்று  இரவு விடிய விடிய கனமழை மழை பெய்தது. கனமழையால் போடிமெட்டு அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போடி,தேனி பகுதியில் வியாழனன்று இரவு தொடங்கிய  கனமழை விடிய விடிய பெய்தது .கடந்த 15 நாட்களாக இரவு முழுவதும் கடும் பனி ,பகலில் கடும் வெயில்  என்ற நிலையில் வியாழனன்று இரவு தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வீரபாண்டியில் 120 மி.மீ மழை பதிவானது .போடியில் 73,அரண் மனைப்புதூரில் 33.8, தேக்கடியில் 26.2,பெரியாறு அணையில் 14.6,கூடலூரில் 6.6,பாளையத்தில் 5.4 என மழையளவு பதிவாகியுள்ளது . மண் சரிவு  தேனி மாவட்டத்தின் தமிழக- கேரள எல்லையாக போடிமெட்டு அமைந்துள் ளது. போடி முந்தலில் இருந்து  20 கிலோ மீட்டர் மலைச்சாலையான இதில்  17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் போடி, தேவாரம், போடிமெட்டு உள்ளிட்ட மலைத்தொடர்களில் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து போடிமெட்டு பூப்பாறை சாலையில் தொண்டிமலை எனும் இடத்தில் நேற்று காலையில் மண் சரிவு ஏற்பட்டது. இத்துடன் மின்கம்பம், மரமும் சரிந்ததால் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. மண் அகற்றப்பட்டு சீரமைக்கப் பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது. தனுஷ்கோடி-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு அபாயம் உள்ளதால் இரவு நேர பயணத்தை தவிர்க் கும்படி தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முல்லைப்பெரியாற்றில்  இழுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

தேனி,ஜன.2- தேனி மாவட்டம், கூடலூர் அருகே முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதியை, தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் புதன்கிழமை கணேஸ்வரியின் உடலை மீட்டனர். வெள்ளிக்கிழமை காலை தம்மனம்பட்டியில் அவரது கணவர் சங்கரின் உடலை மீட்டனர் . கூடலூர் அருகே லோயர் கேம்ப் எல்.எஃப். ரோடு பகுதியைச் சேர்ந்த தம்பதியர் சங்கர் (55)- கணேஸ்வரி  (50 ).பால் மாடு வளர்த்து வருகின்றனர். கடந்த 30 ஆம் தேதி  லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றின் கரையோரம் புல் அறுத்துக் கொண்டிருந்தனர். மறுகரையில் இருந்த இவர்களது பேத்தி சஞ்சு(6) தன்னை அழைத்துச் செல்லுமாறு சத்தம் போட்டுள்ளார். மறுகரைக்கு சென்ற சங்கர், பேத்தியை தோளில் சுமந்து கொண்டு மீண்டும் ஆற்றைக் கடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஆற்றின் வேகத்தில் இருவரும் இழுத்துச் செல்லப்பட்டனர். பதறிப்போன கணேஷ்வரி தானும் ஆற்றில் இறங்கி அவர்களை மீட்க முயன்றார்.இதில் அவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப்பார்த்த மதுரை கூட்டு குடிநீர் திட்ட ஊழியர் சஞ்சுவை மீட்டார். இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் 1000 கன அடி தண்ணீரின் அளவை 200 கன அடியாக குறைத்து ,தேடும் பணியில் ஈடுபட்டனர் .புதன்கிழமை காஞ்சமாந்துறை பாலம் அருகே கிடந்த   கணேஸ்வரியின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர் .வெள்ளிக்கிழமை காலை தம்மனம்பட்டி அருகே சங்கரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு ,பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.