சென்னை கொளத்தூரில் தமுஎகச சார்பில் ‘திருநர் கலை இலக்கிய விழா’
23 Jul 2026, 11:56 pm
<p><strong>சென்னை கொளத்தூரில் தமுஎகச சார்பில் ‘திருநர் கலை இலக்கிய விழா’</strong></p><p>சென்னை, ஜூலை 23- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) சார்பில் “திருநர் கலை இலக்கிய விழா” வடசென்னையிலுள்ள கொளத் தூரில் வியாழனன்று (ஜூலை 23) நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசிய எழுத்தாளர் அ.குமரே சன், “ஆணாக அல்லது பெண்ணாகப் பிறப்பது எவ்வளவு இயற்கையா னதோ, அதேபோல் ஒருவர் வளரும் போது அவரது பாலின அடையாளம் மாறுவதும் இயற்கையான ஒன்றே. பெற்றோர்கள் அன்பின் காரணமாகப் பயந்தாலும், சமூகம் கேலி செய்தா லும் இந்த உண்மையை உரக்கக் கூற வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரி களில் பாலியல் கல்வியோடு, பாலினச் சமத்துவம் பற்றிய கல்வியும் கட்டா யம் போதிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். தொடர்ந்து பாலினச் சமத்துவத்தை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. விழாவில் கலைஞர் அருட் செல்வியின் முரசு கலைக்குழுவின் தப்பாட்டம் மற்றும் கலைவளர்மணி சியாமளாவின் கரகாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கவிஞர்கள் ஷர்வின், கமலி, சகனா ஆகியோர் திருநங்கை களின் துயரங்களைப் பிரதிபலிக்கும் கவிதைகளை வாசித்தனர். கோ.இலட்சியமன்னார் எழுதிய ‘சுடுமண் பொம்மைகள்’ நூலை எழுத் தாளர் கி.ரமேஷும், பா.ஹேமாவதி எழுதிய ‘சரி தவறு யார் முடிவு செய்வது’ நூலை அரசியல் சமூகச் செயல் பாட்டாளர் ஜி.செல்வாவும் அறிமுகப் படுத்தினர். ஆ.ரேவதி நடிப்பில் நுகம் கலைக்களம் வழங்கிய ‘வெள்ளை மொழி’ நாடகம் திருநங்கைகளின் வலியைப் பிறர் உணரும் வகையில் அமைந்திருந்தது. திருநர் உரிமைச் சங்க இயக்குநர் ஆர்.ஜீவா, ஜெ.கிருபா லில்லி எலிசபெத், சமூக நலத்துறை அலுவ லர் பி.எஸ்.ஸ்வாதி, தொழில்நுட்ப இயக்குநர் அனீஷ் ஆண்டோ ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். திரு நங்கைகள் ஆவண மைய இயக்குநர் பிரியா பாபு நிறைவுரையாற்றினார். முன்னதாக தமுஎகச மாவட்டச் செயலாளர் சி.விஜயன் வரவேற்க, மா.அசோக்குமார் நன்றி கூறினார். நிகழ்வில் கலைமாமணி சுதா, கவிஞர் ஜி.கனிமொழி, ஆர்.இளங்கோவன், தமுஎகச மாநிலக் குழு உறுப்பினர் பகத்சிங், மாவட்டத் தலைவர் தி.ராஜே ந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
