தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநங்கைகளை இழிவுபடுத்தும் திருநர் சட்டத் திருத்த மசோதா

18 Mar 2026, 3:34 pm
திருநங்கைகளை இழிவுபடுத்தும் திருநர் சட்டத் திருத்த மசோதா
<p><strong>திருநங்கைகளை இழிவுபடுத்தும் திருநர் சட்டத் திருத்த மசோதா</strong></p> <p>கோவை, மார்ச். 18&ndash; ஒன்றிய அரசு அண் மையில் கொண்டு வந் துள்ள திருநர் சட்டத் திருத்த மசோதா, திரு நங்கை மற்றும் திரு நம்பிகளின் முன்னேற்றத் திற்கு வழிவகை செய்யா மல், அவர்களை இழிவுப டுத்தும் விதமாக அமைந் துள்ளதாகத் தேசிய திருநர் பேரவையின் உறுப்பினர் கல்கி சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் புதனன்று &nbsp;செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒன்றிய சமூக &nbsp;நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் வீரேந்திர குமார் அறிமுகப்படுத்தியுள்ள இந்த சட்டத் திருத்தம், திருநங்கை சமூகத்தின் அடையாளத்தையே அழிப் பதாக உள்ளது. குறிப்பாக, ஒருவர் தனது பாலின &nbsp;அடையாளத்தை மாற்றிக்கொள்ள அரசு சான்றிதழ் &nbsp;பெற வேண்டுமெனில், மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்ற விதிமுறை மனித மரியா தையை மீறும் செயலாகும். ஆண் அல்லது பெண் &nbsp;எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்க ளுக்கு இல்லாத இத்தகைய நிபந்தனை திருநங்கைக ளுக்கு மட்டும் விதிப்பது பாரபட்சமானது. மேலும், 2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய வர லாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் (NALSA vs Union of &nbsp;India) சுய அடையாள உரிமை, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற் போதுள்ள ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திருத் தத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு குறித்துத் தெளிவான திட்டங்கள் இல்லை. மாறாக, &nbsp;திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக ளுக்கு மிகக் குறைந்த தண்டனைகளே முன்வைக்கப் பட்டுள்ளன. அதே சமயம், கட்டாயப் பிச்சை எடுத்தல் &nbsp;போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் &nbsp;வழங்கப்படுவது முரணாக உள்ளது. இந்த மசோதாவில் &rsquo;திருநங்கை&rsquo; என்ற மரியாதை யான சொல்லுக்குப் பதிலாக &rsquo;அரவாணி&rsquo; என்ற சொல் &nbsp;பயன்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், &nbsp;&rsquo;திருநங்கை&rsquo; என்பது ஒரு மதச்சார்பற்ற, மரியாதை யான அடையாளம் என்பதால் அதிகாரப்பூர்வ ஆவ ணங்களில் அந்த சொல்லையே பயன்படுத்த வேண் டும் என வலியுறுத்தினார். ஒன்றிய அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட மாநிலப் பிரதிநிதிகளிடம் எந்த ஆலோ சனையும் நடத்தாமல் இந்த திருத்தம் கொண்டு வரப் பட்டுள்ளது. இதற்கு எதிராக டெல்லி, மும்பை உள் ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. தமிழகத்திலும் விரைவில் போராட்டங்கள் தீவிரமடையும் என்றும், எங்களது சுயமரியாதையை காயப்படுத்தும் இச்சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு &nbsp;உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கல்கி &nbsp;சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.