முந்தய பக்கம்

வங்கிகளில்  உரிமைக் கோரப்படாத பணம் டிஇஏ-வுக்கு மாற்றம்

10 Dec 2025, 3:18 pm
வங்கிகளில்  உரிமைக் கோரப்படாத பணம் டிஇஏ-வுக்கு மாற்றம்
<p><strong>வங்கிகளில் &nbsp;உரிமைக் கோரப்படாத பணம் டிஇஏ-வுக்கு மாற்றம்</strong></p> <p>பொதுத்துறை வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ.58,331 கோடி டெபாசிட் தொகையானது முதலீட்டாளர் கல்வி மற்​றும் விழிப்புணர்வு நிதியத்துக்கு (டிஇஏ) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. &nbsp;12 பொதுத்துறை வங்கிகளில் பத்​து ஆண்​டு​களுக்​கும் மேலாக செயல்​ப​டா​மல் இருக்​கும் நடப்பு மற்​றும் சேமிப்புக் கணக்​கு​களில் உள்ள இருப்புத் தொகை மற்றும் முதிர்வடைந்த பிறகு பத்தாண்டுகள் வரை யாரும் உரிமை கோராத வைப்புத்தொகையும் இந்த நிதியத்துக்கு மாற்றப்படுகின்றன. &nbsp; அந்த வகை​யில் 2025 ஜூன் 30 நிலவரப்​படி, எஸ்​பிஐ வங்​கி​யில் யாரும் உரிமை &nbsp;கோ​ராத ரூ.19,330 கோடி டிஇஏ-க்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. அதே போல &nbsp;பஞ்​சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,911 கோடி, கனரா வங்கியில் ரூ.6,278 கோடி, பரோடா வங்கியில் ரூ.5,277 கோடி, யூனியன் வங்கியில் ரூ.5,105 கோடி ரூபாயும் &nbsp;டிஇஏ-நிதிய கணக்​குக்கு மாற்றப்பட்​டுள்​ளது. &nbsp;இவை த​விர, பேங்க் ஆப் இந்தியா &nbsp;ரூ.3,934 கோடி, இந்​தி​யன் வங்கியில் &nbsp;ரூ.3,740 கோடி, ஐஓபி வங்கியில் ரூ.2,386 கோடி, சென்ட்​ரல் பேங்க் ஆப் இந்​தியா வங்கியில் ரூ.2,092 கோடி, யூகோ வங்கியில் ரூ.1,312 கோடி என &nbsp;உரிமை கோரப்​ப​டாத தொகை யும் டிஇஏ-க்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. &nbsp;ஒட்​டுமொத்தமாக &nbsp;12 பொதுத் துறை வங்​கி​களில் இருந்த ரூ.58,331 கோடி வைப்புத்தொகை ​டிஇஏ-க்கு மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram