தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிலவகைமாற்றம் செய்து புறநகர் ‘ மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்குக! குடியிருப்போர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்

14 Dec 2025, 3:45 pm
நிலவகைமாற்றம் செய்து புறநகர் ‘ மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்குக! குடியிருப்போர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்
<p><strong>நிலவகைமாற்றம் செய்து புறநகர் &lsquo; மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்குக! குடியிருப்போர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்</strong></p> <p>சென்னை, டிச. 14 - புறநகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வகைமாற்றம் செய்து குடிமனைப் பட்டா வழங்க வேண்டுமென்று சோழிங்கநல்லூர் தொகுதி குடியிருப்போர் பொதுநலச் சங்கங் களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது. சோழிங்கநல்லூர் தொகுதி 20 மாநகராட்சி களையும், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், கோவி லம்பாக்கம், நன்மங்கலம் போன்ற ஏழு ஊராட்சிகளையும் உள்ளடக்கியது. 6.50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்டுள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள குடியிருப் போர் நலச் சங்கங்களது பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் ஞாயிறன்று (டிச.14) பெருங்குடியில் நடைபெற்றது. இந்தப் பேர வையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரு மாறு: சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த மக்கள் அரசு புறம்போக்கு நிலம், சாலையோ ரம், ஆற்றங்கரை, ஏரிக்கரை உள்ளிட்ட பகுதி களில் அரசியல்வாதிகளிடம் பணம் கொடுத்து இடம் வாங்கி குடியேறினர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழந்து வீடு களை கட்டியுள்ளனர். புறம்போக்கு நிலங் களில் வசிப்பவர்களுக்கு கிராமப்பகுதியில் 3 செண்ட் நிலமும், நகர்பகுதியில் 2 செண்ட் &nbsp;நிலமும் கொடுக்கப்படும் அல்லது குடியிருந் தால் பட்டா வழங்கப்படும் என்று தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டும் பட்டா வழங்கவில்லை. இந்நிலையில் பட்டா கேட்டு விண்ணப் பிக்கும் மக்களை நீர்நிலை, ஆட்சேபகரமான பகுதி என்று காலத்திற்கு பொருந்தாத கார ணங்களை கூறி பட்டா கொடுக்க அரசு மறுக்கி றது. எனவே அனைவருக்கும் நிலவகை மாற்றம் செய்து குடிமனைப் பட்டா வழங்குவ தோடு, குடிசை மாற்றும் வாரிய குடியிருப்பு களுக்கு கிரைய பத்திரம் வழங்க வேண்டும். வாழ்விடப் பிரச்சனைகளுக்குத் தமிழக அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். பசுமை தீர்ப்பாய உத்தரவை &nbsp;ரத்து செய்க &nbsp;பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் புதிதாக கட்டு மான பணிகளை மேற்கொள்ள தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. &nbsp;இந்தக் கூட்டத்திற்கு பேரமைப்பின் தலைவர் டி.ராமன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வி.பார்த்திபன், பொரு ளாளர் எஸ்.கோமதிநாயகம், நிர்வாகிகள் பிரான்சிஸ், அரிபாஸ்கர், தியாகராஜன், பாபு, செல்விராஜன், லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.