நீதிபதி சுவாமிநாதனை வேறு மாநிலத்திற்கு மாற்றுக! முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் வலியுறுத்தல்
14 Dec 2025, 3:45 pm
<p><strong>நீதிபதி சுவாமிநாதனை வேறு மாநிலத்திற்கு மாற்றுக! முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் வலியுறுத்தல்</strong></p>
<p>திருநெல்வேலி, டிச. 14 – தற்போது நிலவும் மத நல்லிணக்கப் பதற்றத்தைத் தணிக்க, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முக்கிய வழக்குகளை வேறு அமர்விற்கு மாற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் வலியுறுத்தியுள்ளார். மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் தீர்ப்புகள் அகில இந்திய வழக்கறிஞர் சங்க திருநெல்வேலி மாவட்ட மாநாட்டில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் மத நல்லி ணக்கம் நிலவுகிறது. ஆனால், திருப்பரங் குன்றம் மற்றும் கன்னியாகுமரி வழக்கு களில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பு கள் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வித மாக உள்ளன” என்று குற்றம் சாட்டினார். 45 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னியா குமரியில் முருகன் சிலை வைத்து தீபம் ஏற்ற உத்தரவிட்ட அவரது தீர்ப்பு, மத அமை திக்கு ஊறு விளைவிக்கும் அச்சத்தை ஏற்படுத் துகிறது.ஆர்.எஸ்.எஸ்.காரராக செயல்படு கிறார். நீதிபதிகள் எந்த அரசியல் பின்னணியில் இருந்தாலும், நீதிபதியான பிறகு கட்சிக் காரர்களாகச் செயல்படக் கூடாது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்த ஜி.ஆர். சுவாமிநாதன் தற்போதும் ஆர்.எஸ்.எஸ்.காரராகவே செயல்படுகிறார். இது நீதியல்ல என்றும், எந்த இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை கோவில் நிர்வாகமே முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். அவர் மீது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தகுதி நீக்க நடவடிக்கை மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தி யுள்ளது. நீதித்துறையில் சனாதனக் கருத்துகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் நீதிபதி சுவாமி நாதனின் தீர்ப்பு ஆளுங்கட்சிக்கு (திமுக விற்கு) பலம் சேர்க்கும் என்றும் ஹரி பரந்தாமன் கருத்து தெரிவித்தார்.</p>
