முந்தய பக்கம்

இராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று மண்டபத்தில் ரயில்கள் நிறுத்தம்!

28 Nov 2025, 2:28 pm
இராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று மண்டபத்தில் ரயில்கள் நிறுத்தம்!
<p><strong>இராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று மண்டபத்தில் ரயில்கள் நிறுத்தம்!</strong></p> <p>இராமநாதபுரம்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை கனமழை முதல் அதிகனமழை வரை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. அதன்படி, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான &lsquo;ரெட்&rsquo; அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் வங்கக் கடலில் இலங்கை அருகே மையம் கொண்டுள்ள டிட்வா புயல், மணிக்கு 10 முதல் &nbsp;13 கி.மீ. வேகத்தில் வடக்கு தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை &nbsp;பெய்து வருகிறது. பலத்த சூறாவளிக்காற்று காரணமாக, அனைத்து ரயில்களும் இராமேஸ்வரத்திற்குப் பதிலாக மண்டபத்திலேயே நிறுத்தப்படுகின்றன. இராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்ல வேண்டிய ரயிலும் மண்ட பத்தில் இருந்தே புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித் துள்ளது. இராமேஸ்வரம் பகுதிகளில் உள்ள பள்ளி களுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப் பட்டது. புயல் அச்சுறுத்தல் காரணமாக இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து 5 ஆவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.</p>
Share
FacebookXWhatsAppTelegram