தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மா விவசாயிகளுக்கு பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி

7 Feb 2026, 5:37 pm
மா விவசாயிகளுக்கு  பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி
<p><strong>மா விவசாயிகளுக்கு &nbsp;பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி</strong></p> <p>திருவில்லிபுத்தூர், பிப்.7- திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் மா சாகுபடி அதிகம் உள்ள மம்சாபுரம், வாழை குளம், சிங்கம்மாள்புரம் உள்ளிட்ட பகுதி களில் மா பயிரிடும் விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத் துறை சார்பில் பூச்சி மற்றும் &nbsp;நோய் மேலாண்மை குறித்த பயிற்சி வழங் &nbsp;கப்பட்டது. கடந்த ஆண்டு, தோட்டக்கலைத் துறை &nbsp;துணை இயக்குநர் சுபா வாசுகி அவர்களின் &nbsp;உத்தரவின் பேரில், உதவி இயக்குநர் திலக வதி தலைமையில், மாமரங்களில் முறை யான கவாத்து மேற்கொண்டால் நல்ல மக சூல் பெறலாம் என விவசாயிகளுக்கு அறி வுறுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக, தை மாதமான இந்நேரத்தில் மாமரங்களில் பூக்கள் பூக்கத் &nbsp;தொடங்கும் நிலையில், பூச்சி தாக்குதல் &nbsp;மற்றும் பூக்கள், பிஞ்சுகள் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், தோட்டக்கலைத் துறை &nbsp;துணை இயக்குநர் சுபா வாசுகி தலைமை யில், திருவில்லிபுத்தூர் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் திலகவதி, செண்ப கத்தோப்பு பகுதியில் மா பயிரிடும் விவசாயி களுக்கு மாமரங்களில் நோய் தாக்குதல் ஏற்படாமல் தடுப்பது மற்றும் பூக்கள், பிஞ்சு கள் கொட்டாமல் பாதுகாப்பது தொடர்பாக &nbsp;செய்முறை விளக்கங்களுடன் பயிற்சி வழங்கினார். இந்த பயிற்சியில் மண்டல ஆராய்ச்சி நிலையத் தலைவர் மற்றும் பேராசிரியர் பால சுப்பிரமணியம், பூச்சியியல் துறை பேராசி ரியர் ஜடா கவிதா, நோயியல் துறை பேராசி ரியர் அகிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு &nbsp;விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விளக்கங் கள் வழங்கினர். பயிற்சி முகாமில் ஏராளமான மா விவ சாயிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக் &nbsp;கான ஏற்பாடுகளை தோட்டக்கலை அலு வலர் வருகவேறு மற்றும் உதவி தோட்டக் கலை அலுவலர் சித்திரைச் செல்வி ஆகி யோர் இணைந்து செய்திருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.