கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
12 Mar 2026, 4:20 pm

211 மண்டல காவல் அதிகாரிகளுக்கு பயிற்சி

ஈரோடு, மார்ச் 12- ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன் னிட்டு 8 தொகுதிகளிலும் நியமிக்கப்பட்ட 211 மண்டல காவல் அதிகாரிகள் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து பயிற்சி கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகள் வெளியாக உள்ளது. இதனையொட்டி, ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தி யூர், கோபி, பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிக் கும், 211 மண்டல அலுவலர்களுக்கு, 211 மண்டல காவல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலை யில், ஈரோடு வேளாளர் கல்லூரியில் 211 மண்டல காவல் அதிகாரிகளும், தேர்தலை முன்னிட்டு மேற் கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பயிற்சி கூட்டம் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தலைமை வகித்தார். இதில், காவல் அதிகாரிகள் மாவட்டத்திலுள்ள 2,379 வாக்குச்சாவடிகளிலும் தேர் தலுக்கு முன்னர் செய்ய வேண்டிய பணிகள், தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் தேர்தலுக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய பணி களின் தயார் நிலைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப் பட்டன. குறிப்பாக, போலீசாரின் பொறுப்பு, கடமை கள், பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய சட்டம் ஒழுங்கு பணிகளின் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தேர்தல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் பாபு, குற்றப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமார் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

கழிவறைகளை சீரமைக்க வலியுறுத்தல்

கோவை, மார்ச் 12- கோவை அரசு கலைக்கல்லூரியிலுள்ள கழிவறை களை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி கல்வி இணை இயக்கு நரிடம் மனு அளித்தனர். கோவை அரசு கலைக்கல்லூரியில் 3 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில், அங்குள்ள ஆண்கள் கழிவறை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதுதொடர்பாக கல்லூரி முதல்வரிடம் பலமுறை முறையிட்டும், தற்காலிக மாக மட்டுமே சுத்தம் செய்யப்படுவதால், மாணவர்க ளுக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே, நாளொன்றுக்கு இரண்டு முறை கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும். தற் போதைய கழிவறைகள் பயன்பாட்டிற்கு தகுதியில் லாத நிலையிலுள்ளதால், புதிய கழிவறைகளை கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் புதனன்று கல்லூரி கல்வி இணை இயக்கு நரிடம் மனு அளித்தனர். இந்நிகழ்வில், சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பிரசாந்த், ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உணவில் பல்லி விழுந்த விவகாரம் மூன்று பேர் பணியிடை நீக்கம்

கோவை, மார்ச் 12- கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் ஹவு சிங் யூனிட் நடுநிலைப்பள்ளியில் கடந்த செவ்வாயன்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற்ற விசா ரணையில் உணவில் பல்லி இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் இதுகுறித்து விசாரணை மேற் கொண்ட மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பான வர், அப்பள்ளியின் சமையலர் மனோகரி, உதவியா ளர் கமலா மற்றும் சத்துணவு அமைப்பாளர் கௌசல்யா ஆகிய மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.