முந்தய பக்கம்

உழவர்களுக்கு பயிற்சி முகாம்

3 Jan 2026, 4:57 pm
உழவர்களுக்கு பயிற்சி முகாம்
<p><strong>உழவர்களுக்கு பயிற்சி முகாம்</strong></p> <p>பெரம்பலூர், ஜன.3- &nbsp;பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரியில், தமிழ்நாடு உணவுப் பதப்படுத்தல், வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம், தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து உழவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறை, வேளாண் சந்தைப்படுத்தல், வேளாண் வணிகத் துறை, மாவட்ட தொழில் மையம் ஆகியவற்றின் சார்பில், உணவு தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகளுக்கான இணையவழி சந்தை மேம்பாட்டு பணிமனை தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் தெய்வீகன் பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். &nbsp;விவசாயிகளுக்கு முன்னெடுப்புகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும், ஆன்லைன் விற்பனை ஏலத்தின் மூலம் பால் கூட்டுறவுகளுக்கு விற்பனை குறித்த பயிற்சி பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்வில், ரோவர் கல்விக் குழும மேலாண் தலைவர் முனைவர் வரதராஜன், துணைத் தலைவர் ஜான் அசோக் வரதராஜன், கல்லூரி முதல்வர் முனைவர் இறைவன் அருட்கனி அய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram