முந்தய பக்கம்

கால்நடை மருத்துவமனையில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி முகாம்

23 Feb 2026, 5:35 pm
கால்நடை மருத்துவமனையில் வேளாண் கல்லூரி  மாணவிகளுக்கு பயிற்சி முகாம்
<p><strong>கால்நடை மருத்துவமனையில் வேளாண் கல்லூரி &nbsp;மாணவிகளுக்கு பயிற்சி முகாம்</strong></p> <p>தஞ்சாவூர், பிப்.23- &nbsp;திருவையாறு அரசு கால்நடை மருத்துவமனையில், ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரி மாணவிகளின் கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ், கால்நடை இனப்பெருக்கம், செல்லப் பிராணிகள் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான &nbsp;பயிற்சி முகாம் நடைபெற்றது. &nbsp;இந்த பயிற்சியில், கால்நடை மருத்துவமனை மருத்துவர் சிலம்பரசன், முதுநிலை &nbsp;கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் முத்துராஜா ஆகியோர் கால் நடைகள், செல்லப்பிராணிகள் ஆரோக்கியம், நோய்தடுப்பு மற்றும் அவசர சிகிச்சை, கால்நடை இனப்பெருக்கம் தொடர்பாகவும், கால்நடைகளின் நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தொற்று நோய்களை தடுத்து, மனிதர்களுக்கு பரவுதலை தடுத்தல் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். &nbsp;இதில் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் மற்றும் கால்நடை மருத்துவமனை உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram