தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

31 Dec 2025, 3:37 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

ரயில் டிக்கெட் முன்பதிவு:  3% கட்டணச் சலுகை

சென்னை, டிச.31 – எண்மப் (Digital) பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லா பயணச்சீட்டு எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இந்தச் சலுகை ஜனவரி 14 முதல் ஜூலை 14 வரை ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

உள்கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாம்: செல்வப்பெருந்தகை

சென்னை, டிச.31 – காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி விவகாரங்களை கூட்டணி கட்சிகளோ அல்லது மற்ற கட்சிகளோ பெரிதுபடுத்த  வேண்டாம் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசுக்கு எதிராகவோ, பாஜகவுக்கு ஆதரவாகவோ யாராவது பேசினால் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

6-வது நாளாக நீடிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை, டிச.31 – சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் 6-வது நாளை எட்டியுள்ளது. கடந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராடி வருகின்றனர்.

கல்வி நிதியை விடுவிக்க  கனிமொழி எம்பி வலியுறுத்தல்

சென்னை, டிச.31 – தமிழக மாணவர்களுக்குச் சேர வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதில் ஒன்றிய பாஜக அரசு ஆர்வம் காட்ட வேண்டும் என கனிமொழி எம்பி விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து  ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்துக்குப் பதிலடியாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தச்சங்குறிச்சியில் 2026-இன் முதல் ஜல்லிக்கட்டு

சென்னை, டிச.31 –  2026-ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடத்தத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு வரும் ஜனவரி 3-ஆம் தேதி இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

“66 லட்சம் வாக்காளர்கள் முகவரியற்றவர்களா?”   தேர்தல் ஆணையத்திற்கு ப.சிதம்பரம் கண்டனம்

சிவகங்கை, டிச.31 –  தமிழகத்தில் 66  லட்சத்திற்கும் அதிக மானோரை ‘முகவரியற்ற வர்கள்’ எனப் புதிய பிரிவின் கீழ் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ள தேர்தல் ஆணையத்தின் நட வடிக்கைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம் பரம் கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். காரைக்குடியில் புத னன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகளை நீக்குவதில் தவறில்லை. ஆனால், பீகார் அல்லது மேற்கு வங்கத்தில் இல்லாத ‘முகவரியற்றவர்கள்’ என்ற புதிய முறையைத் தமிழ கத்தில் மட்டும் அறிமுகப் படுத்தி 66,44,881 பேரை  நீக்கியிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.  கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 7.5 லட்சம் பேர் தங்களைத் தவறாக நீக்கியுள்ளதாக மனு அளித்துள்ளனர்.  இது தேர்தல் ஆணை யத்தின் தவறை அவர்களே நிரூபிப்பதாக உள்ளது” என்றார். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து இத்தகைய சூழ்ச்சி களை முறியடிக்க வேண்டும் என்றும், விடுபட்டவர்களை மீண்டும் சேர்க்க திமுக - காங்கிரஸ் கூட்டணி தீவிர மாகச் செயல்பட்டு வருவ தாகவும் அவர் குறிப்பிட்டார்.

2026-இல் விண்வெளித் துறையில் பல சாதனைகள்  இஸ்ரோ தலைவர் தகவல்

சென்னை, டிச.31 –  2026-ஆம் ஆண்டு இந்திய விண்வெளித் துறையில் மிக முக்கியமான ஆண்டாக அமையும் என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். ககன்யான் திட்டத்திற்கான முதற்கட்ட சோதனை முயற்சியாக, ‘வியோமித்ரா’ என்ற பெண் ரோபோவுடன் கூடிய ஆளில்லா ராக்கெட் இந்த ஆண்டில் ஏவப்பட உள்ளது. மேலும்,  பிஏஎஸ்எல்வி சி-62 மற்றும் ஓசோன்சாட்-3ஏ போன்ற முக்கிய செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.

நிறைவடைந்தது வடகிழக்கு பருவமழை: இயல்பை விட 3% குறைவு

சென்னை, டிச.31 – தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை நிறைவடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் சராசரியாக 42.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது, இது இயல்பான அளவை விட 3 சதவீதம் குறைவாகும். சென்னையில் 10 சதவீதம் மழை குறைவாகப் பதிவாகியுள்ள நிலையில், நெல்லையில் இயல்பை விட 95 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. ஜனவரி இரண்டாம் வாரம் வரை லேசான மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார பேருந்து வரி விலக்கு நீட்டிப்பு: அரசுக்கு நன்றி

சென்னை, டிச.31 – மின்சார பேருந்துகளுக்கான சாலை வரி விலக்கை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிர மாநிலத்தைப் போலவே தமிழகத்திலும் மின்சார ஆம்னி பேருந்துகளுக்குச் சுங்கக் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் எனச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு  தேதிகள் மாற்றம்

சென்னை, டிச.31 –  நிர்வாகக் காரணங்களால் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 11-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 10-ஆம் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர தேர்வுகள் மாற்றமின்றி நடைபெறும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.