ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆவேச ரயில் மறியல்
12 Feb 2026, 4:57 pm

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆவேச ரயில் மறியல்

திருவள்ளூர், பிப்.12- ஒன்றிய பாஜக அரசின் தவறான கொள்கைகளை கைவிட வலியுறுத்தி பிப். 12 அன்று திருவள்ளூர் மாவட்ட முழுவதும் 9 மையங்களில் மறியல் நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலை யத்திலிருந்து யுடியுசி மாவட்ட செயலாளர் ஜி.பழனி தலைமையில், 500க்கும் மேற்பட்ட உழைப்பாளி மக்கள், தொழிலாளர்கள் ஊர்வலமாக வசந்த பஜார் வழியாக, ரயில் நிலையம் நோக்கி முழககமிட்டவாறு சென்றனர். ரயில் நிலையம் அருகில் வந்ததும் காவல்துறையினர் தடுத்தனர். தடைகளை தாண்டி ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். ரயில்வே இருப்புப் பாதையில் மோடி யின் உருவபொம்மையை எரித்து ஆவேச மாக முழக்கமிட்டனர். பின்னர் சென்னை யிலிருந்து வந்த விரைவு ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் காவல்துறையினர் அனைவரை யும் கைது செய்தனர். இதில் தமிழ்நாடு தென்னை விவசாயி கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.துளசிநாராயணன், விசிக மாவட்ட செயலாளர் நேசக்குமார், விசிக மாவட்ட மாநில நிர்வாகி கோபிநாயனார், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கே.அர்ஜுனன், ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர் அருள், விதொச மாவட்ட துணைத் தலைவர் இ.ராஜேந்திரன், சிபிஎம் வட்ட செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

திருப்பத்தூர் நகராட்சி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, ஐஎன்டியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் தேவராஜ், வேணுகோபால், ஜோதி, முனிராஜி, சரவணகுமார், பாண்டியமன்னன், சாமிக்கண்ணு, ரங்கன், ரவி, சிபிஎம் தாலுகா செயலாளர் காமராஜ், காசி, சிங்காரம், ஆனந்தன், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் அருள் சீனிவாசன், ஏஐடியுசி மாநிலத் துணைத் தலைவர் தேவதாஸ், தொமுச மாவட்ட தலைவர் நரேஷ்குமார், ஐஎம்யுசி மாவட்டத் தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற வேலை நிறுத்த மறியல் போராட்டத்தில் அழகுநம்பிவெல்கின் (சிஐடியு மாநில செயலாளர்), வெ.கலைநேசன்(தொமுச), கே.கோவிந்தராஜ் (ஏஐடியுசி), முகமதுஅலிஜின்னா(ஐஎன்டியுசி), கா.வெ.திருப்பதி (எச்எம்எஸ்), எம்.சரோஜா(ஏஐசிசிடியு) , சி.எஸ்.மகாலிங்கம் (எஸ்கேஎம்) ஆகியோர் தலைமையில் தாங்கினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் முன்பு சி.சரவணன்(சிஐடியு), என்.ஞானசேகரன்(தொமுச), எஸ்.மூர்ததி (ஏஐடியுசி), எஸ்.பி.சக்கரவர்த்தி(ஐஎன்டியுசி) தலைமையில் மறியல் நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் பொருளாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.தாட்சாயணி, செயலாளர் எம்.வெள்ளி கண்ணன்,துணைத் தலைவர் கே.லிங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள் 3 வது நாளாக, ரூ.6ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டம் பிப் 12 அன்று திருவள்ளூரில் மாவட்ட தலைவர் பி.நடேசன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர், என்.கீதா,மாவட்ட இணை செயலாளர்கள், வி.மணி, வி.ரவிக்குமார், மாவட்ட துணை தலைவர், எஸ்.செந்தில்குமார். உள்ளிட்டு 45 பேர் பங்கேற்றுள்ளனர்.தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தும் வரை வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.படம் திருவள்ளூர் மாற்றுத்திறனாளி 3ம் நாள் மறியல்