தீக்கதிர் முக்கிய செய்திகள்
21 Dec 2025, 3:21 pm

215 கி.மீ.க்கு மேல் ரயில் கட்டணம் உயர்வு

சென்னை: டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 215 கி.மீ.க்கு மேல் பயணிப் போருக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 215 கி.மீ.க்கு மேல் சாதாரண வகுப்பில் பய ணிப்போருக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 1 பைசா ரயில் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. பயணிகள் ரயில், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு கட்டண உயர்வு இல்லை. 215 கி.மீ. வரை பயணிப்ப வர்களுக்கு ரயில் கட்டண உயர்வு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

. ‘காந்தி மீண்டும் கொல்லப்பட்டு உள்ளார்’

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வர் ப.சிதம்பரம் செய்தியா ளர்கள் சந்திப்பின் போது, “நேஷனல் ஹெ ரால்டு வழக்கு ஜோடிக்கப் பட்டது. இவ்வழக்கில் நீதிபதி சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார் என்றும், நூறு நாள் வேலை திட்டத்துக்கு தற் போது வைத்துள்ள பெயர் காந்தியை விட பொருத்த மான பெயரா? பெயரை நீக்கியதன் மூலம் 77 ஆண்டுகளுக்குப் பின் மகாத்மா காந்தி மீண்டும் கொல்லப்பட்டுள்ளார்” என்றும் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் வீ.அஜய் கோஷ் மறைவு: சிஐடியு இரங்கல்

சென்னை, டிச.21 - சென்னை உயர்நீதிமன்ற வழக்குரை ஞர் அஜய் கோஷ் மறைவுக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக் குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு பொதுச் செய லாளர் எஸ்.கண்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிலாளர் வழக்குகளில் தனித்துவம் பெற்ற வழக்குரைஞராக திகழ்ந்த தோழர் வீ.அஜய் கோஷ் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரது இழப்பு தொழிலாளி வர்க்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரழிப்பாகும். தோழர் அஜய் கோஷ் மறைவுக்கு சிஐடியு மாநிலக் குழு அஞ்சலி செலுத்துகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர் தரப்பு வழக்கு களில் நிபுணத்துவம் பெற்ற என்.ஜி.ஆர், பிரசாத், அரிபரந்தாமன் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவத்துடன் அரசு போக்குவரத்து, மின்சாரம், டாஸ்மாக், அங்கன்வாடி, அரசு ஊழியர், ஆசிரி யர், தனியார் துறை என அனைத்து பிரிவு தொழிலாளர்களின் சட்ட உரிமை களுக்கான வழக்குகள், நிர்வாகங்களின் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு எதி ரான பல்வேறு தொழிலாளர் வழக்கு களில் தனது வாத திறமையால் தொழி லாளருக்கு சாதகமான உத்தரவுகளை பெற்று தந்தவர் தோழர் அஜய். தோழர் அஜய் கோஷ் அலுவலக மானது எந்நேரமும் தொழிலாளர்கள் நிறைந்ததாகவே இருக்கும். அனைத்து தரப்பு தொழிலாளர்களின் நம்பிக்கை பெற்றவராக திகழ்ந்தவர். எந்தவொரு நிர்வாகத்திற்கும் ஆதரவாக வழக்காடு வதில்லை என்ற நிலைபாட்டை கொண் டிருந்தவர். தோழர் அஜய் கோஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது இளம் வழக்குரைஞர்களுக்கும் சிஐடியு மாநிலக் குழு சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள் கிறோம். தோழர் அஜய் கோஷ் உடலுக்கு சிஐடியு நிர்வாகிகள் கே.திருச்செல்வன், கே.விஜயன், கே.சி. கோபிகுமார் உள்ளிட் டோர் அஞ்சலி செலுத்தினர்.

லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு

சென்னை, டிச.21- தமிழ்நாட்டில் டிசம்பர் 24 வரை வறண்ட வானிலை நிலவக் கூடும் எனவும், ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளதாகவும், டிசம்பர் 25 அன்று டெல்டா மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் மித மான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

படைப்பாற்றலை வளர்க்க 15 மாவட்டங்களில் இயந்திரவியல் ஆய்வகங்கள்

சென்னை: படைப்பாற்றலை வளர்க்க 15 மாவட்டங் களில் தலா ஒரு இயந்திரவியல் ஆய்வகங்கள் ரூ.6.09 கோடி யில் நிறுவப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாண வர்களிடம் பிரச்னைகளை தீர்க்கும் திறனை வளர்க்கவும், குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனைக் கற்றுக் கொள்ளவும், படைப்பாற்றலை வளர்க்கவும் 15 மாவட்டங்களில் தலா ஒரு இயந்திரவியல் ஆய்வகம் என்ற கணக்கில் 15 இயந்திரவியல் ஆய்வகங்கள் ரூ.6.09 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டு உள்ளன. இதற்கான பாடத்திட்டம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அண்ணா பல்கலைக்கழ கத்தின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பாடத் திட்டத்தில் வகுப்பு ஒன்றுக்கு 11 வகையான உபகரணங்கள் வாயிலாக, 10 பரிசோதனைகள் உருவாக்கப்பட்டு 90 சத வீதம் செய்முறை கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. மேலும் இன்றைய நவீன உலகம் செயற்கை நுண்ண றிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் துறையை நோக்கி நகர்கிறது. இந்த வகுப்புகள் மாணவர்களுக்கு, எதிர்காலத்தில் பொறி யாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் களாக உருவெடுக்க தேவையான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும். பள்ளிகள் அதனைச் சுற்றியுள்ள இதர பள்ளிகளுக்கு ஹப் பள்ளியாகச் செயல்பட்டு மற்ற பள்ளிகளின் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டு இறுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாகச் செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே, இந்த இயந்திரவியல் ஆய்வ கங்கள் வெறும் தொழில்நுட்ப பயிற்சி மட்டுமல்ல. இது மாண வர்களின் சிந்தனை முறையையே மாற்றக்கூடிய ஒரு முழுமையான கல்வித் திட்டமாகும். இது அரசுப்பள்ளி மாண வர்களை நாளைய உலகின் சவால்களை எதிர்கொள்ள தயார் செய்து, திறன்மிக்க படைப்பாளர்களாக மாற்றும் என்பதில் ஐயமில்லை” என கூறப்பட்டுள்ளது.