ரயில் என்ஜின் டிரைவர்களின் 48 மணி நேர உண்ணாவிரதம் நிறைவு
4 Dec 2025, 3:52 pm
<p><strong>ரயில் என்ஜின் டிரைவர்களின் 48 மணி நேர உண்ணாவிரதம் நிறைவு </strong></p>
<p>திருச்சி, டிச.4- ரயில் என்ஜின் டிரைவர்களின் வார ஓய்வு நேரத்தை 30 மணி நேரத்தில் இருந்து 46 மணி நேரமாக மாற்றி அமைக்க வேண்டும். ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி, அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில், 48 மணிநேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் திருச்சி ரயில் நிலையம் அருகில் நடைபெற்றது. உண்ணாவிரதப் போராட்டத் திற்கு, அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்க கோட்டச் செயலாளர் கண்ணை யன் தலைமை தாங்கினார். உண்ணா விரதத்தை சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி டிஆர்இயு கோட்டச் செயலாளர் கரி காலன், கோட்டத் தலைவர் சிவக்குமார், துணைப்பொதுச் செய லாளர் ராஜா, ஏ.ஐ.எஸ்.சி.எஸ்டி தென்மண்டல பொதுச்செயலாளர் இசக்கிமுத்து, டிஆர்இயு, சி.சி.ஆர்.சி கிளை தலைவர் எஸ்.எஸ். கணேசன், கோட்டத் தலைவர் பாக்கியராஜ், மண்டல உறுப்பினர் ஜெயா சிரில் ஆகியோர் பேசினர். இதில் ஏராள மானார் கலந்து கொண்டனர். போராட்டத்தை சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் மணிமாறன் முடித்து வைத்தார்.</p>
<p> </p>
