முந்தய பக்கம்

தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு ரயில் ஓட்டுநர்கள் திறந்த மேல்முறையீடு

23 Jan 2026, 5:49 pm
தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு ரயில் ஓட்டுநர்கள் திறந்த மேல்முறையீடு
<p><strong>தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு ரயில் ஓட்டுநர்கள் திறந்த மேல்முறையீடு</strong></p> <p>ஈரோடு, ஜன.23- ஆர்ஆர்பி மூலம் பணியிட மாற்றங்கள் வழங்கு வதற்கு முன், நிலுவையிலுள்ள அனைத்து கோரிக்கை களையும் நிறைவேற்ற வேண்டும் என ரயில் ஓட்டு நர் சங்கத்தினர் திறந்த மேல் முறையீடு செய்துள்ள னர். &lsquo;தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதியே&rsquo; என்ற அடிப்படையில் அகில இந்திய லோகோ ரயில் ஓட்டு நர்கள் சங்கத்தின் கோட்டத் தலைவர் சீனிவாச பட், தலைமையில் ஈரோட்டில் வெள்ளியன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கிளை துணைச்செயலாளர் சனோஜ் வரவேற்றார். கோட்டச் செயலாளர் எஸ். அருண்குமார் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப் பாட்டத்திற்கு, விதிமுறைகள் மற்றும் நடைமுறை களை கடைப்பிடித்து தங்களது பணியிட மாறுதல் கோரிக்கைகளை சமர்ப்பித்த சேலம் பிரிவின் மூத்த &nbsp;பணியாளர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். உண்மையான மூத்த பணியாளர்களை புறக்கணிப்பது பெரும் அநியாயமாகும். விதிமுறைகளை பின்பற்றிய பணியாளர்கள் தண்டிக்கப்படக் கூடாது. ரயில்வே ஆட் சேர்ப்பு வாரியம் மூலம் பணியிட மாற்றங்கள் வழங்கு வதற்கு முன், நிலுவையிலுள்ள பணியிட மாறுதல் உள் ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என திறந்த மேல்முறையீடு செய்தனர். இறுதியாக, கோட்டப் பொருளாளர் அயூப் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram