தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மகாராஷ்டிராவில் தொடரும் சோகம் 9 மாதங்களில் 781 விவசாயிகள் தற்கொலை

13 Dec 2025, 4:23 pm
மகாராஷ்டிராவில் தொடரும் சோகம்  9 மாதங்களில் 781 விவசாயிகள் தற்கொலை
<p><strong>மகாராஷ்டிராவில் தொடரும் சோகம் &nbsp;9 மாதங்களில் 781 விவசாயிகள் தற்கொலை</strong></p> <p>புதுதில்லி பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 2025ஆம் ஆண்டின் முதல் வெறும் 9 மாதங்களில் மொத்தம் 781 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என சட்டமன்றத்தில் அம்மாநில பாஜக கூட்டணி அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகள் குறித்து சட்டமேலவை உறுப்பி னர்கள் சுதாகர் அத்பல்லே, அசோக் ஜக்டாப், அபிஜித் வஞ்சாரி, ராஜேஷ் ரத்தோட் மற்றும் தீரஜ் லிங்காட் உள்ளிட்டோர் சட்டமன்றத்தில் கடும் வாதத்துக்கு இடையே கேள்வி எழுப்பினர். &nbsp; கேள்விகளுக்கு நிவாரணம் மற்றும் மறு வாழ்வுத்துறை அமைச்சர் மகரந்த் ஜாதவ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், &ldquo;மகா ராஷ்டிராவில் கடன், பயிர்ச்சேதம் மற்றும் அதிக மழைப்பொழிவு போன்ற பல்வேறு கார ணங்களால் இந்த ஆண்டின் 9 மாதங்களில் மொத்தம் 781 விவசாயிகள் தற்கொலை செய்து &nbsp;கொண்டுள்ளனர். விதர்பாவின் நாக்பூர் பிரிவில் அதிகளவில் தற்கொலைகள் பதிவாகி யுள்ளன. அங்கு இந்த ஆண்டு மட்டும் 296 விவ சாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அதே நேரத்தில் கனமழையால் கடுமையான அளவில் இயல்பு நிலையை இழந்துள்ள மராத்வாடாவில் 212 தற்கொலைகள் பதிவாகி யுள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2023 தரவுகளின்படி (கடைசியாகக் கிடைத்தது), நாட்டில் இரண்டு விவசாயிகள் தற்கொலை களில் சராசரியாக ஒன்று மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில் பதிவான 6,669 விவசாயத் தற்கொலைகளில், 4,150 பேர் விவசாயிகள் என்றும், 2,519 பேர் விவசாயத் தொழிலாளர்கள் ஆவர். &nbsp;தற்கொலைகளைத் தடுக்க, விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்தல், நீர்ப்பாசன வசதிகளை அதிகரித்தல், பயிர்/விவசாய நிலம்/கால் நடைகள் இழப்புகளுக்கு விவசாயிகளுக்கு உட னடியாக இழப்பீடு வழங்குதல் மற்றும் பேரிடர் நிவாரண மையங்களை இயக்குதல் போன்ற நடவடிக்கைகள் மாவட்ட அளவில் செயல்படுத் தப்பட்டு வருகின்றன&rdquo; என அதில் கூறப்பட்டுள் ளது. மேலும் நிவாரணம் குறித்து அமைச்சர் மகரந்த் ஜாதவ் மழுப்பலாக கூறினார். &nbsp;நாடாளுமன்ற மாநிலங்களவையில் தேசிய வாத காங்கிரஸ் (சரத்) எம்.பி., பௌஜியா கான்,&rdquo;அரசுக்கு ஒரு கேள்வி உள்ளது. விவசாயி கள் எப்போது அரசுக்கு அன்பானவர்களாக மாறுவார்கள்? விவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகளின் அடா வடி மிக மோசமான அளவில் அதிகரித்து வரு கிறது. 9 மாதங்களில் 781 விவசாயிகள் தற்கொலை என்று கூறப்பட்டாலும், &nbsp;கடந்த 3 மாதங்களில் மட்டும் மகாராஷ்டிராவில் 766 &nbsp;விவசாயிகள் தற்கொலைகள் செய்து கொண் டுள்ளனர். இந்த ஆண்டு கனமழை மற்றும் பரவலான வெள்ளத்தைத் தொடர்ந்து மாநில அரசு ரூ.31,628 கோடி நிவாரணம் அறிவித்த போதிலும், கள யதார்த்தம் வேறு விதமாக உள்ளது&rdquo; என அவர் குற்றம் சாட்டினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.