கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
25 Jan 2026, 6:29 pm
<p><strong>போக்குவரத்து விதிமீறல்: ரூ.1.14 கோடி அபராதம்</strong></p>
<p>சேலம், ஜன.25- சேலம் சரகத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 1,367 வாகனங்களுக்கு ரூ.1.14 கோடி அபராதம் விதிக் கப்பட்டுள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட் டங்களில் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நட வடிக்கைகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தொடர்ந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறிய வாகனங்களை இயக்கிய ஓட்டுநர்களுக்கு அப ராதம் விதித்து வருகின்றனர். அதன்படி, சேலம் சர கத்துக்குட்பட்ட சேலம், சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, தருமபுரி அரூர், பாலக் கோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதத்தில் விதி முறையை மீறி இயக்கிய 1,367 வாகனங்களுக்கு, ரூ. 1.14 கோடி அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் சரகத்தில் கடந்த மாதம் நடத்தப் பட்ட சோதனையில், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 126, அதிக பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் சென்ற 293, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 153, தகுதிச்சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லா மல் வாகனம் ஓட்டிய 150 பேரும் பிடிபட்டனர். இது மட்டுமின்றி, போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கிய 1,367 வாகனங்களுக்கு ரூ.1.14 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், 44 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.</p>
<p>4 ஆண்டுகளில் 1400 பேருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கல் ஈரோடு, ஜன.25- ஈரோடு மாவட்டத்தில், கால்நடைத்துறை சார்பில், கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் 1,400 பேருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்ட கால்நடைத்துறை சார்பில், கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு பல்வேறு விதமான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி 1,400 பேருக்கு ரூ.2 கோடியே 67 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறப்பு கால் நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப் பட்டு, ரூ.25 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 40 ஆயிரத்து 35 கால்நடை வளா்ப்போர் பயனடைந்துள்ளனர். நபார்டு திட்டத் தின்கீழ், ரூ.4 கோடியே 59 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் ஈரோடு கால்நடை பன்முக மருத்துவமனை மற்றும் பேரோடு கால் நடை மருத்துவமனைக்கு புதிய கட்டடம், தேவர்மலை கால் நடை மருந்தகத்துக்கு புதிய கட்டடம் மற்றும் ஜம்பை கால் நடை மருந்தகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு செயல் பட்டு வருகிறது. தீவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நிலங்களில் தீவனப் பயிர்களை ஊடுபயி ராக விளைவிக்கும் திட்டத்தின் கீழ் 135 விவசாயிகள் பயன டைந்துள்ளனர். தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 350 பேருக்கு புல் நறுக் கும் கருவிகள் வாங்க 50 சதவிகிதம் மானியமாக மொத்தம் ரூ.53 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள கணவரை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்க ளுக்கு 50 சதவீத மானியத்தில் 40 நாட்டுக் கோழிக் குஞ்சு கள் வழங்கும் திட்டத்தின்கீழ் 1,400 பேருக்கு ரூ.22 லட்சத்து 40 ஆயிரம் மானியத்தில் 56 ஆயிரம் கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. தீவன பெருக்கத் திட்டத்தின் கீழ் நீா்பா சன வசதி கொண்ட நிலங்கள் மற்றும் மானாவாரி நிலங்க ளில் பசுந்தீவனம் உற்பத்தி செய்திட 540 ஏக்கரில் 636 பேருக்கு ரூ.21 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் தீவன விதை கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டுக்கோழிகள் வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற விவசாயிகளுக்கு சிறிய அளவி லான நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டத்தில் ரூ.8 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் 6 பேர் கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானி யம் வழங்கப்பட்டுள்ளதென கால்நடைத்துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.</p>
