பிளக்ஸ் பேனரால் போக்குவரத்திற்கு இடையூறு
7 Feb 2026, 5:37 pm
<p><strong>பிளக்ஸ் பேனரால் போக்குவரத்திற்கு இடையூறு</strong></p>
<p>போலீசார் அறிவுறுத்தல் நாமக்கல், பிப்.7- குமாரபாளையம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் நிலையத்தில் பிளக்ஸ் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய, குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி, குமாரபாளையம் நகரில் ஆங்காங்கே பல பிளக்ஸ் போர்டுகள வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிளக்ஸ் நிறுவனத்தார் தங்கள் பிளக்ஸ் போர்டுகள் வைக்க இடம் பிடித்து மூங்கில்களை கட்டி வைத்துள்ளனர். இதனால் சாலையோரமாக இருக்கும் பிரேம்கள், சாலைகளில், வாகனங்களில் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களின் கண்களுக்கு தெரிவது இல்லை. இதனால் இதில் மோதி நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே, மூன்று நாட்களுக்குள் பிளக்ஸ், பிரேம்களை அகற்ற வேண்டும். அரசியல் கட்சியினர் அடிக்கும் பேனர்களில் பிளக்ஸ் நிறுவன பெயர்கள் இருக்க வேண்டும். நகராட்சி அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும். சேலம் சாலையில் உள்ள டிவைடர்களில் அரசியல் கட்சியினர் பிளக்ஸ், கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் உள்ளிட்டவைகளை வைக்கக்கூடாது. சாலையோரமாக, போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத இடங்களில் மட்டும் வைக்க வேண்டும், என்றார்.</p>
